சனி பெயர்ச்சிக்கு முன் சனி அஸ்தமனம்: வெற்றியின் உச்சம் தொடப்போகும் ராசிகள் இவைதான்

Shani Ast: பிப்ரவரி 28 ஆம் தேதி சனி அஸ்தமனம் நடக்கவுள்ளது. இதனால் யாருக்கு அதிக நன்மை? எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? சனி அஸ்தமன ராசிபலனை இங்கே காணலாம்.

Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். அதற்கு முன்னதாக   பிப்ரவரி 28ஆம் தேதி சனி அஸ்தமனம் நிகழவுள்ளது. அவர் 37 நாட்கள் அஸ்தமன நிலையில் இருப்பார். அதன் பின்னர்   ஏப்ரல் 6, 2025 அன்று அவர் உதயமாவார்.

1 /10

கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக இருக்கும் சனி பகவான் பிப்ரவரி 28ஆம் தேதி அஸ்தமனம் ஆகிறார். மார்ச் மாத இறுதியில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வான சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது.

2 /10

சனி பெயர்ச்சிக்கு முன் நடக்கவுள்ள சனி அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் இது பொற்காலமாய் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /10

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு, இந்த நேரம் நன்றாக இருக்கும். சனி பெயர்ச்சிக்கு முன் வரும் சனி அஸ்தமனம் ரிஷப ராசியினருக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

4 /10

சிம்மம்: மீன ராசிக்கும் சனி பெயர்ச்சிக்கு முன் வரும் சனி அஸ்தமனம் சாதகமாக இருக்கும். மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் அதிக நன்மைகளைப் பெறலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் விரைவில் முடியும். வணிகத் துறையில், உங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். பண வரவு அதிகமாகும்.

5 /10

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அஸ்தமனம் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தையும் காணக்கூடும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை அனுபவிப்பீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

6 /10

தனுசு: சனி அஸ்தமனத்தின் தாக்கத்தால் தனுசு ராசிக்கார்ரகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் திருப்தி இருக்கும். வருமானத்தில் விரைவான அதிகரிப்பு இருக்கும். பணி நிமித்தமாக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

7 /10

மீனம்: சனி பெயர்ச்சிக்கும் முன் நிகழவுள்ள சனி அஸ்தமனம் மீன ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை மிக நன்றாக இருக்கும்.

8 /10

சனி பெயர்ச்சி தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ,'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.

9 /10

சனி கிழமைகளில் சனி பகவானின் கோவிலில் எள் தீபம் ஏற்றுவதும், ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வதும், சனி சாலிசா, அனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகிய ஸ்தோத்திரங்களை படிப்பதும் ஏழரை சனி தாக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.