Healthy Lifestyle Tips: நமது அன்றாட வாழ்வில் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையைப் பராமரிப்பது மிக அவசியமாகும். இன்றைய வேகமான வாழ்க்கையில், மக்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகம் சோர்வடைகிறார்கள். மக்கள் அன்றாட பணிகளில் மிகவும் பிஸியாகிவிட்டதால், அவர்களால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க முடிவதில்லை.
ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியமாகும். இதன் மூலம் நம் ஆயுட்காலத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல நோய்களிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறையும் மாசுபாடும் மக்களின் வாழ்க்கையைப் பாதித்து நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து வருவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வேலை அழுத்தம் காரணமாக, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. இதை சீர்படுத்த சில ஆரோக்கியமான பழக்கங்களை நாம் கடைபிடிக்க வெண்டியது மிக அவசியமாகும்.
ஆரோக்கியமாக இருக்க வாழ்க்கை முறையில் இந்த மாற்றங்கள் அவசியம்
Balanced Food: சமச்சீர் உணவு
உணவில் பழங்கள், பச்சை காய்கறிகள், கொட்டைகள் மற்றும் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்வது அவசியம். இதனால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். உணவில் புளிப்பு, இனிப்பு, கசப்பு, உப்பு மற்றும் துவர்ப்பு என 6 வகையான சுவைகளையும் சேர்க்கவும். ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
Seasonal Foods: பருவகால உணவுகள்
ஒவ்வொரு பருவத்திலும், சில பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைக்கின்றன. அவை அந்த பருவத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த உணவுகளாக பார்க்கப்படுகின்றன. அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆகையால், பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
Additional Foods: துணை உணவுகள்
ஆயுர்வேதத்தில், வாதம், பித்தம் மற்றும் கபத்தின் சமநிலையை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. அதற்கு, இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் சீரகம் போன்ற துணை உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகள் உடலை காய்ச்சலிலிருந்து பாதுகாத்து செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இவற்றை வழக்கமான தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Sleep: போதுமான தூக்கம்
ஆயுர்வேதத்திலும் தூக்கம் ஒரு வரமாகக் கருதப்படுகிறது. ஒரு நோயாளி போதுமான அளவு தூங்கினால், அவர் தன்னை மிக விரைவாக சரிசெய்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆகையால், அன்றாட வாழ்க்கை முறையிலும் தூக்கம் ஒரு சிறப்பு இடத்தைப் பெற வேண்டும். நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியமான உடலுக்கும் வழிவகுக்கிறது.
Yoga: யோகசனம்
உணவு மற்றும் பானங்களைத் தவிர, தியானம், கவன ஒருங்கிணைப்பு மற்றும் மன அமைதியையும் வாழ்க்கை முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும். தினமும் யோகாசனம் செய்வதும் சூரிய ஒளியில் சிறிது நேரம் பிராணாயாமம் மற்றும் தியானம் செய்வதும் உடலில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நெய் கலந்த உணவுகளை இவர்கள் சாப்பிடவே கூடாது..! உயிருக்கே ஆபத்து..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ