சாம்பியன் டிராபி 2025 தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அணி நடத்தினாலும், இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட உள்ளனர். வரும் பிப்ரவரி 19ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கு பெரும் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பைனலுக்கு சென்று இந்திய அணி தோல்வி அடைந்ததால் இந்த முறை வெற்றி பெறுமா என்று எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. மேலும் இந்த தொடருடன் சில ஜாம்பவான் வீரர்கள் ஓய்வை அறிவிக்க உள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
மேலும் படிக்க | சிஎஸ்கே பிளேயிங் 11ல் இவருக்கு நிச்சயம் இடம் இருக்கும்! யார் இந்த இளம் வீரர்?
விராட் கோலி
36 வயதாகும் விராட் கோலி சர்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்துள்ளார். ஆனால் சமீப நாட்களாக ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார். சமீபத்திய ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மா
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தார். இருப்பினும் அதன் பிறகு எந்த ஒரு போட்டியிலும் ரன்கள் அடிக்கவே இல்லை. மேலும் அவரது தலைமையில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் பார்டர் கவாஸ்கர் டிராபி போன்ற தொடர்களை வரிசையாக இழந்துள்ளது. இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோகித் சர்மா அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவிக்கலாம்.
கேன் வில்லியம்சன்
நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக பல்வேறு தொடர்களில் இருந்து விலகி இருந்தார். மேலும் அவரைத் தாண்டி அணியில் பல வீர்கள் சிறப்பாக விளையாடிய வருவதால் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை அவர் விளையாடுவார் என்பது சந்தேகமே. சமீபத்திய முத்தரப்பு போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கலாம்.
மிச்சல் ஸ்டார்க்
ஆஸ்திரேலியாவின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்திய பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது விலகி உள்ளார் மிச்சல் ஸ்டார்க். இந்நிலையில் விரைவில் அனைத்து வித கிரிக்கெட்டிலும் ஓய்வையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது நபி
ஆப்கானிஸ்தானின் சீனியர் வீரர்களில் ஒருவரான முகமது நபிக்கு தற்போது 40 வயது ஆகிறது. இருப்பினும் தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கலாம்.
மேலும் படிக்க | CSK ரசிகர்களுக்கு ஷாக்: சேப்பாக்கில் தோனியை பார்க்க முடியாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ