Weight Loss Tips: உடல் பருமன் உலக மக்களை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பலர் இதன் பிடியில் சிக்கி செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், இதை குறைப்பது மிகப்பெரிய விஷயம். குறிப்பாக, தொப்பை கொழுப்பு அதிகரித்து விட்டால், அதை கரைக்க பல வித முயற்சிகளை எடுக்க வேண்டி வருகிறது.
ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை உடல் பருமனுக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் இந்த காலத்தில் எடை அதிகரிப்பால் பாதிக்கபடுகிறார்கள். அதிகரிக்கும் எடையைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு கடினமான பணியாக உள்ளது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
சில காய்கள் எடை இழப்பில் நமக்கு உதவுகின்றன. இவற்றை உட்கொள்வது கலோரிகளை அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான சில காய்களைபற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுவதோடு உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன.
ஆய்வுகளில் தெரியவந்த உண்மை
5 காய்கறிகளை உணவில் சேர்ப்பது எடையை குறைப்பதோடு உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக USDA தெரிவித்துள்ளது. இந்த காய்களில் கலோரிகளின் அளவும் மிக குறைவு.
இந்த காய்கறிகளை டயட்டில் சேர்த்தால் சில நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்
பீட்ரூட்:
பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இது வயிற்றுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது.
பசலைக் கீரை:
பசலைக் கீரை குறைந்த கலோரி கொண்ட சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
முட்டைக்கோஸ்:
முட்டைகோசில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதை உட்கொள்வது நீண்ட நேரம் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. முட்டைக்கோஸ் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கார்பன் உணவாக உள்ளதாக உணவுமுறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இது எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.
ப்ரோக்கோலி:
இதில் போதுமான அளவு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே உள்ளன. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது தவிர, ப்ரோக்கோலியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. இதனால் எடையை எளிதில் குறைக்க முடிகிறது.
சீமை சுரைக்காய்:
சீமை சுரைக்காயில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி6 கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை.... இந்த உணவுகள் புற்றுநோயை வரவழைக்கும் ஆபத்தை கொண்டவை
மேலும் படிக்க | அடிவயிறு தொப்பையை எலுமிச்சை சாறு மூலம் எளிமையாக குறைப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ