Tamilnadu CM MK Stalin warning | மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய Samagra Shiksha திட்டத்தின் நிதியை வழங்கவில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்த நிதியை வழங்க முடியும் என பிடிவாதமாக கூறி வருகிறது மத்திய அரசு. ஆனால், தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட ஒருசில அம்சங்களைத் தவிர மற்ற அம்சங்களை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக கூறி அதனை செயல்படுத்தியும் வருகிறது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.
இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கவில்லை என்பது எங்களுக்கும் தெரியும். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதியை கொடுக்க முடியும் என கூறியுள்ளார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், " They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!. "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!. எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என காட்டமாக கூறியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த பதிவை பகிர்ந்துள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், " மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!. எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என்பதை அவரும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | இன்னோர் மொழிப்போரை தூண்டுவது போல் உள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ