EPFO Interest Rate: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கான வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை பிப்ரவரி மாத உறுதியில் வெளியிடும். பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மத்திய அறங்காவலர் குழுவின் (Central Board of Trustees) கூட்டத்தில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2024-25 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கான முந்தைய ஆண்டில் அறிவிக்கப்பட்ட 8.25% என்ற அளவை சிறிதளவு அதிகரிக்க முடிவு எடுக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
EPF கணக்கிற்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா?
EPF உறுப்பினர்கள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். எனினும், இந்த முறை வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் வாய்ப்பு இல்லை என்றும், ஏற்கனவே உள்ள வட்டி விகிதமே தொடரப்படும் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
முந்தைய ஆண்டுகளுக்கு இணையான விகிதம்
EPFO முதலீட்டுக் குழு மற்றும் கணக்குக் குழு அடுத்த வாரம் EPFO அமைப்பின் ஆண்டு வருமானம் மற்றும் செலவினங்களைப் பற்றி விவாதிக்கும். இந்த கூட்டத்தில், எந்தவொரு அவசரநிலையையும் கையாள போதுமான அளவு உபரியை விட்டுச்செல்லும் வட்டி விகிதத்தை எட்டுவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும். "சம்பந்தப்பட்ட குழுக்கள் இது தொடர்பன விவரங்களை தயாரித்து வருகின்றன. இதில் முந்தைய ஆண்டுகளுக்கு இணையான விகிதத்தை முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அரசு அதிகாரி ஒருவர்கூறினார். எனினும், இந்த விகிதம் சிறிதளவு அதிகரிக்கக் கூடும் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிஎப் க்ளெய்ம் எண்ணிக்கை அதிகரிப்பு
2022-23 நிதியாண்டில், EPFO ரூ.91,151.66 கோடி வருமானத்திற்கு 8.15% க்கும் அதிகமான வட்டி விகிதத்தை வழங்கியது. அசல் தொகை ரூ.11.02 லட்சம் கோடி. 2023-24 ஆம் ஆண்டில், ரூ.1,07,000 கோடி வருவாய் ஈட்டும் தொகைக்கு 8.25% வட்டி விகிதத்தை வழங்கியது.
EPFO முதலீடுகளில் சிறந்த வருமானம்
நடப்பு நிதியாண்டில் அதன் சந்தாதாரர் எண்ணிக்கை அதிகரித்து, அதன் தற்போதைய வாடிக்கையாளர் எண்ணிக்கை 6.5 கோடி பயனர்களாக அதிகரித்துள்ளது. EPFO முதலீடுகளில் இந்த ஆண்டு சிறந்த வருமானத்தைப் பெற்றிருந்தாலும், அதே நேரத்தில் க்ளைய்ம் தீர்வுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
EPFO 2024-25 ஆம் ஆண்டில் 5 கோடிக்கும் அதிகமான க்ளெய்ம்களை கையாண்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் ரூ.1.82 லட்சம் கோடி மதிப்பிலான 44.5 மில்லியன் க்ளைய்கள் இருந்தன என அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | PM Kisan: 19வது தவணை யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? செக் செய்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ