Valentines Day Ideas | இந்த ஆண்டு காதலர் தினம் பிப்ரவரி 14 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளை தங்கள் காதல் வாழ்க்கையின் மறக்க முடியாத நாளாக நீங்கள் மாற்ற விரும்பினால், உங்களுக்கான சூப்பர் ஐடியாவை தான் இங்கே சொல்லப்போகிறோம். காதலர்கள் வெளியே செல்ல விரும்பினால், இந்த 6 வகையான இடங்களை தேர்வு செய்யுங்கள். நண்பர்கள் யாரும் இல்லாமல் காதலர்களாகிய நீங்கள் இருவர் மட்டும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடலாம்.
லேக் வியூ பிக்னிக்
காதலர் தினத்தில் உங்கள் துணையுடன் சுற்றுலா செல்வது நல்ல யோசன. மிகச் சிறந்த பொழுதுபோக்கு, சாகசம் என என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அப்படி செல்ல திட்டமிட்டால் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாத இடத்தில் இருக்கும் ஒரு ஏரிக்கரை, நீர்வீழ்ச்சி உள்ள சுற்றுலா தளத்தை தேர்வு செய்யுங்கள். அங்கே நீங்களே மீன் வாங்கி சமைக்கலாம் அல்லது சமைத்து வாங்கி ஓர் இடத்தில் வைத்து ருசிக்கலாம். அந்த நேரத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். சிறப்பான பொழுதுபோக்காக இருக்கும்.
கடற்கரை
விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஜோடி எப்போதும் வெளியே செல்வது என்றால் அடிக்கடி கடற்கரைக்கு செல்வார்கள். அதைப் போல் நீங்கள் கடற்கரைக்குசெல்லுங்கள். சூரிய அஸ்தமனம் அல்லது சூரிய உதயத்தின் போது கடற்கரையில் கைகோர்த்து நடப்பதை விட காதல் வாழ்க்கையில் வேறு என்ன சுகம் இருக்க முடியும்?
விளையாட்டு
இப்போதெல்லாம், டேட்டிங் செல்லும் தம்பதிகள் ஒன்றாக சாகச விளையாட்டுகள் விளையாட விரும்புகின்றனர். மலையில் இருந்து குதித்தல், நீச்சலடித்தல், மிகப்பெரிய ராட்டினத்தில் ஒன்றாக செல்லுதல் உங்களின் காதலர் தினத்தை சிறப்பாக்கும். அப்படியான இடத்தை நீங்கள் தேர்வு செய்து பயணிக்கலாம். சிம்பிளாக இருக்க வேண்டும் என்றால் டென்னிஸ், செஸ், பேட்மின்டன் ஆகிய விளையாட்டுகளை விளையாடலாம்.
மலையேற்றம்
விளையாட்டைப் போலவே மலையேற்றமும் ஒரு சாகச பயணம் தான். மலையேற்றம் உங்களுக்கு பிடித்தம் என்றால் டிரெக்கிங் செல்லக்கூடிய இடங்களை பார்த்து தேர்வு செய்து இருவரும் சென்று வாருங்கள். இயற்கையோடு சாகசம் நிறைந்த பயணம் இருவருக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும். அதேபோல், வனப்பகுதியில் விலங்குகள் மீது சஃபாரி செல்லலாம். மலைப்பிரதேசங்கள் நிறைந்த பகுதிகளுக்கு சென்று உரிய வழிகாட்டலுடன் இந்த பயணத்தை நீங்கள் மேற்கொண்டால் உங்களின் காதலர் தினம் திரிலிங்காக இருக்கும்.
பைக் டேட்டிங்
இருவரும் நீண்ட தூரம் பைக்கில் பயணிக்க வேண்டும் என்றால் பைக் டேட்டிங் செல்லலாம். நெடுஞ்சாலையில் இருவரும் விரும்பும் தொலைவு பயணிக்கலாம். காதலிக்கு பைக் ஓட்ட தெரிந்தால் அவரை பைக் ஓட்ட வைத்து நீங்கள் பின்னால் அமர்ந்து காதலர் தினத்தை மலரும் நினைவு நாளாக மாற்றிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | ரோஸ் டே-கிஸ் டே எப்பாே? காதலர் தினத்துக்கு முன் இதெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கோங்க..
மேலும் படிக்க | காதலர் தினத்தில் ரோஜாவின் சிறப்பு என்ன தெரியுமா? பல வண்ண ரோஜாவின் ரகசியங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ