நடிகர் அஜித்குமார் நடிப்பில் பிப்.06ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. பெரிதளவு எதிர்ப்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையாக விமர்சங்களையே பெற்றுள்ளது. இப்படத்தின் அஜித்குமாருக்கு ஜோடியாக திரிஷா, வில்லனாக அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த இரண்டே மாதத்தில் இவரது திரைப்படம் குட் பேட் அக்லி வெளியாக உள்ளது. இது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. பொதுவாக அஜித்குமாரின் திரைப்படம் வெளியாக ஆண்டுகள் எடுக்கும். அப்படி இருக்கையில், தற்போது அடுத்தடுத்து அவரது படம் திரையரங்குகளில் வெளியாவது ரசிகர்களின் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்து கொண்டு அதில் மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இதையடுத்து தற்போது போர்ச்சுகல்லில் நடைபெற்றும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் படிங்க: மீண்டும் மீண்டுமா? அஜித்தின் 64-வது படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?
விஜய் vs அஜித்
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு போட்டியாக கோடையில் விஜய்யின் சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு அறிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு கில்லி திரைப்படம் ரீ ரிலீஸாகி மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
சச்சின் திரைப்படத்தின் ரீரிலீஸ் அறிவிப்பை இன்று தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் கோடையில் கொண்டாட்டம், சச்சின் ரீ ரிலீஸ் என அவர் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யின் கடைசி படம்
தற்போது விஜய் அரசியலில் குதித்துள்ளதால், அவர் தனது 69வது படம் ஜனநாயகன் படத்துடன் திரைப்பயணத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். சமீபத்தில் ஜனநாயகனின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: மார்கெட் இழந்தாலும் கோடி கோடியாய் சம்பாதிக்கும் 54 வயது நடிகை!! யார் இவர்?