'என்னை சோதிக்காதீர்கள்' இபிஎஸ் உடன் பிரச்னையா...? செங்கோட்டையன் சொன்னது என்ன?

AIADMK Sengottaiyan: "எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன், என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள்" என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 12, 2025, 10:03 PM IST
  • இன்று இரவு கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது.
  • எதிர்கட்சித் தலைவரின் கட்டளையில் தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது - செங்கோட்டையன்
  • 43 ஆண்டு ஆட்சியில் நான் யாரையும் தவறாக பேசியதில்லை - செங்கோட்டையன்
'என்னை சோதிக்காதீர்கள்' இபிஎஸ் உடன் பிரச்னையா...? செங்கோட்டையன் சொன்னது என்ன? title=

AIADMK Sengottaiyan, TN Latest News Updates: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய பகுதியில் நடைபெறும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட மேடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவரின் புகைப்படங்களும் பெரிதாக ஒரே அளவில் இடம்பெற்றிருந்தன.

இந்த விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,"தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில் யார் எந்த ஊரில் உள்ளார்கள் என எனக்கு தெரியும். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது. எதிர்கட்சித் தலைவரின் (இபிஎஸ்) கட்டளையில் தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

AIADMK Sengottaiyan: 'என்னைச் சோதிக்காதீர்கள்...' - செங்கோட்டையன்

என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனை ஆண்டுகளில் அரசியல் உள்ளேன், எண்ணற்ற தலைவர்களை பார்த்துள்ளேன். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் நான் சென்று கொண்டுள்ளேன். செய்தியாளர்கள் என்னிடம் எதவாது கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர். காலையில் சொன்னதை இப்போதும் சொல்கிறேன், நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் சொல்ல மாட்டேன்.

இரண்டே வார்த்தையை தான் நான் சொன்னேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லை. அவர்கள் புகைப்படம் இல்லாததால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, நான் புறக்கணிக்கவில்லை. அதைப்பற்றி தற்போது நிறைய பேர் பேசி வருகின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன். என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள். நான் தெளிவாக இருக்கிறேன். விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் இருக்கிறேன். தலைவர்கள் வழியில் வந்தவன் நான். எதிர் தரப்பில் இருந்து நிறைய கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். அதற்கு பதில் கூற முடியாது, சொன்னால் சிக்கல் ஆகிவிடும்.

AIADMK Sengottaiyan: 'ஜெயலலிதா கை அசைவில்...'

காவல்துறை பாதுகாப்பு அவர்கள் போட்டு இருக்கின்றனர். பாதுகாப்பு கண்காணிப்பு என்பது காவல் துறை போட்டது. நான் போட சொல்லவில்லை. கோட்டைக்கு வர வேண்டும் என்றால் செங்கோட்டையனை சுற்றி வருகின்றார்கள். 43 ஆண்டு ஆட்சியில் நான் யாரையும் தவறாக பேசியதில்லை. கோபப்பட்டது இல்லை. ஜெயலலிதா கை காட்டினால் என்ன செய்ய வேண்டும் எனக்கு தெரியும். அப்புறம் ஏன் கழற்றிவிட்டார் என கேட்கலாம், அது வேறு. அதை சொன்னால் நிறைய பிரச்சனை வரும்" என்றார்.

AIADMK Sengottaiyan: மேடையில் ஒளிப்பரப்பான ஜெயலலிதா பேசும் வீடியோ

எதை கொடுத்தாலும் வெற்றிகரமாக செய்பவர் செங்கோட்டையன் என ஜெயலலிதா சொல்லி இருக்கிறார் என்றும் தன்னை பல்வேறு முறை பாராட்டி இருக்கிறார் எனவும் அவர் கூறினார். உடனே மேடையில் ஜெயலலிதா செங்கோட்டையனை பாராட்டி பேசும் காணொலி ஒளிபரப்பட்டது. அதை தொடர்ந்து பேசிய செங்கோட்டையன்,"இன்றைக்கும் நான் தொண்டன். எப்போதும் தலைவன் என்று சொன்னதில்லை, அதில் இருந்து நீங்கள் என்னை புரிந்துகொள்ளலாம். மீண்டும் தமிழகத்தில் தொண்டர்களோடு தொண்டராக இருந்து பணியாற்றுவேன்" என கூறி பேச்சை நிறைவு செய்தார்.

AIADMK Sengottaiyan: உரையின் முடிவில்...

பொதுக்கூட்ட உரையில் 250க்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற பெயரை பயன்படுத்தாமல் உரையை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

மேலும் படிக்க | பிரசாந்த் கிஷோரால் திமுக ஜெயிக்கல! அமைச்சர் ஐ.பெரியசாமி தடாலடி - சைட்ல தவெகவுக்கும் ஒரு கொட்டு!

மேலும் படிக்க | பாஜகவுக்கு எச்சரிக்கை! பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பகுத்தறிவு பிரச்சாரம் - திமுக அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News