IPL 2025: ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (Indian Premier League) வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த கையோடு அனைத்து சர்வதேச வீரர்களுக்கும் ஏறத்தாழ 10-15 நாள்கள் ஓய்வு கிடைக்கும். இது வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் சின்ன பிரேக் கிடைக்கும். அதன்பின் சுமார் 2 மாதங்களுக்கு தினமும் கிரிக்கெட் திருவிழாதான்.
IPL 2025: ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முக்கிய வீரர்கள்?
அந்த வகையில், தற்போது ஐபிஎல் தொடரில் சில முக்கிய வீரர்கள் பங்கேற்பது சந்தேகத்திற்கு இடமாகி உள்ளது. ஆர்சிபி அணியில் ஜேக்கப் பெத்தல், ஜோஷ் ஹேசில்வுட்; டெல்லி அணியில் மிட்செல் ஸ்டார்க், சன்ரைசர்ஸ் அணியில் பாட் கம்மின்ஸ், லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ், மும்பை அணியில் பும்ரா, அல்லாஹ் கசன்ஃபர் உள்ளிட்டோரில் சிலர் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது, சிலர் உறுதியாகி உள்ளது. இதில் மும்பை அணியே பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது எனலாம்.
IPL 2025: மும்பை அணிக்கே பெரிய பிரச்னை
ஏனென்றால், அல்லாஹ் கசன்ஃபர் (Allah Ghazanfar) ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. எனவே இவருக்கு பதில் மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள் யாரையாவது மும்பை அணி எடுக்க வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பும் குறைவு. சான்ட்னர் இருந்தாலும் வேறு பிரீமியம் ஸ்பின்னரை கண்டுபடித்தாகவே வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) உள்ளது. இருப்பினும், அடில் ரஷீத், முஜீப் உர் ரஹ்மான், கேசவ் மகாராஜ் உள்ளிட்டோரை மும்பை அணி முயற்சிக்கலாம்.
IPL 2025: பும்ராவுக்கு மாற்று யார்?
ஆனால், பும்ராவுக்கு சரி நிகரான மாற்று வீரர் இந்த உலகத்திலேயே இல்லை. அப்படியிருக்க அவரது இடத்தை நிரப்புவது இயலாத காரியம். இருந்தாலும் அவர் இல்லாமல் டிரென்ட் போல்ட், தீபக் சஹார் பவர்பிளே ஓவர்களை வீச இருப்பார்கள். டெத் ஓவர்களை வீசுவதற்கு மும்பை அணி ஒரு நல்ல வேகப்பந்துவீச்சாளரை அடையாளம் காண வேண்டும். உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடிய கார்த்திக் தியாகி, சிவம் மாவி, சேத்தன் சக்காரியா, நவ்தீப் சைனி உள்ளிட்டோரை மும்பை அணி முயற்சித்து பார்க்கலாம்.
IPL 2025: ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பிருக்கா?
ஒருவேளை டெத் ஓவருக்கு ரீஸ் டோப்ளி, லிசார்ட் வில்லியம்ஸ் ஆகியோரில் யாராவது சரிப்பட்டு வந்தால் அவர்களை பிளேயிங் லெவனில் எடுத்துக்கொள்ளலாம். எனவே பும்ராவுக்கு (Jasprit Bumrah) பதில் ஒரு வேகப்பந்துவீச்சாளரை எடுப்பதற்கு பதில் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை எடுத்துக்கொண்டால் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் மும்பை அணிக்கு பலம் கூடும். அந்த வகையில் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களில் ஷர்துல் தாக்கூர் சிறப்பான ஆப்ஷனாக இருப்பார்.
IPL 2025: ஏன் ஷர்துல் தாக்கூர்?
சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டிகளில் ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur) மிகச்சிறப்பான பார்மில் இருக்கிறார். மும்பை அணியில் ஏற்கெனவே பேட்டிங் சிறப்பாக இருக்கும் சூழலில், ஒரு ஸ்பின்னரை அமரவைத்துவிட்டு இவரை விளையாடினால் மேலும் பலமாகும். இவரை வைத்து ஒன்றிரண்டு ஓவர்களை வீசலாம். ஏற்கெனவே மும்பை அணியில் சான்ட்னர், தீபக் சஹார் என இரண்டு முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் (Chennai Super Kings) இருக்கும் நிலையில், 3வது சிஎஸ்கே வீரராக ஷர்துல் தாக்கூர் இடம்பெறவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2025: CSK ருதுராஜ் கெய்க்வாட் vs RCB ரஜத் பட்டிதார் - டி20இல் யார் கில்லி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ