மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: இனி இந்த தொகையும் கிடைக்கும், அரசு அதிரடி

Central Govt Pensioners Latest News: நிலையான மருத்துவ கொடுப்பனவு என்றால் என்ன? எந்த ஓய்வூதியதாரர்களுக்கு இது கிடைக்கும்? இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 13, 2025, 12:33 PM IST
  • மத்திய அரசு ஓய்வூதியதாரரா நீங்கள்?
  • உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
  • DoPPW என்பிஎஸ் உறுப்பினர்கள் ஓய்வுக்குப் பிறகு நிலையான மருத்துவ கொடுப்பனவு பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: இனி இந்த தொகையும் கிடைக்கும், அரசு அதிரடி title=

Central Govt Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் குடும்பத்தில் மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 

National Pension Scheme

மத்திய அரசு ஊழியராக இருந்து, தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் ஓய்வூதியத்திற்கான தேர்வை செய்துள்ள ஊழியர்களுக்கு ஒரு நிவாரணம் கிடைத்துள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DoPPW) என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) ஓய்வுக்குப் பிறகு நிலையான மருத்துவ கொடுப்பனவு (FMA) பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த அதிகாரப்பூர்வ உத்தரவு

இந்தத் தகவல் அதிகாரப்பூர்வ உத்தரவின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் புதிய படிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பணம் செலுத்தும் செயல்முறையும் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தவிர, கொடுப்பனவைத் தொடர வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Fixed Medical Allowance: நிலையான மருத்துவ கொடுப்பனவு என்றால் என்ன?

நிலையான மருத்துவ கொடுப்பனவு என்பது ஓய்வு பெற்ற மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகையான மாதாந்திர கொடுப்பனவு. இது மத்திய அரசு சுகாதாரத் திட்ட (CGHS) வசதி கிடைக்காத பகுதிகளில் வசிப்பவர்களுக்கானது. இது இந்த ஊழியர்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.

FMA: யாரெல்லாம் இதற்கு தகுதி பெறுவார்கள்?

NPS-ன் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் இந்த நிலையான மருத்துவ கொடுப்பனவின் பலனைப் பெறலாம். இருப்பினும், அவர்கள் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்திற்கு (Central Government Health Scheme) தகுதி பெற்றிருக்க வேண்டும். CGHS -க்கு தகுதி பெற்றிருந்தாலும், அதன் கீழ் உள்ள பகுதிகளில் இல்லாமல், வேறு பகுதிகளில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த வசதி கிடைக்கும். CGHS சலுகைகளை பெறாத அல்லது உள்நோயாளிகள் துறை சேவைகளை மட்டுமே பயன்படுத்தும் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

FMA -க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை என்ன?

- NPS -இன் கீழுள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான FMA மாதத்திற்கு ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-  பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களுக்கும் இதே தொகைதான் உள்ளது.
- ஓய்வூதியதாரர் உயிருடன் இருப்பதையும் சலுகைகளைப் பெற தகுதியுடையவர் என்பதையும் உறுதிப்படுத்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். 

Life Certificate: ஆயுள் சான்றிதழ் என்றால் என்ன?

ஆயுள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணமாகும். ஓய்வூதிய நிறுவனங்கள் பொதுவாக ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் ஓய்வூதியத்தைத் தொடர ஜீவன் பிரமான் என்றும் அழைக்கப்படும் வாழ்க்கைச் சான்றிதழைக் கோருகின்றன.

ஆயுள் சான்றிதழை, ஆதார் அட்டை மற்றும் பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி ஜீவன் பிரமான் போர்டல் மூலம் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். ஒரு ஊழியர் தனது வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், அவரது FMA கட்டணம் நிறுத்தப்படும்.

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பால்... வீட்டு கடன் வட்டி விகிதத்தை குறைத்த சில வங்கிகள்

மேலும் படிக்க | சாமானியர்களுக்கு என்ன நன்மை? புதிய வருமான வரி மசோதா 2025 குறித்து 10 முக்கியமான விஷயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News