இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) FASTag தொடர்பான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. புதிய விதிகள் 17 பிப்ரவரி 2025 முதல் அமலுக்கு வரும். டோல் பிளாசாக்களில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க பலர் FASTag பயன்படுத்தி வரும் நிலையில், புதிய விதிகளை பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும். NPCI கொண்டுவந்துள்ள புதிய FASTag விதிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
FASTag என்றால் என்ன?
ஃபாஸ்டாக் என்பது ஒரு மின்னணு குறிச்சொல் ஆகும், இதன் உதவியுடன் டோல் பிளாசாவில் கட்டணம் செலுத்தலாம். ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டம் அல்லது மாநிலத்திற்கு உங்கள் வாகனம் நுழையும் போது, நீங்கள் சாலை வரி செலுத்த வேண்டும்.
FASTag புதிய விதிகள்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் NPCI 28 ஜனவரி 2025 அன்று FASTagக்கான புதிய விதிகளை வெளியிட்டது. புதிய விதிமுறைகள் பிப்ரவரி 17 முதல் அமலுக்கு வருகிறது. டோல் பிளாசாவில் உங்கள் பாஸ்டேக் பிளாக்லிஸ்ட் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தால், கட்டணம் செலுத்த முடியாது. இருப்பினும், புதிய விதிகளின்படி, பிப்ரவரி 17, 2025 முதல், பயனர்களுக்கு அவர்களின் Fastag-ஐ ஆக்டிவேட் செய்ய செய்ய 70 நிமிட காலஅவகாசம் கிடைகும்.
பாஸ்டேக் பிளாக் லிஸ்ட்
சில நேரங்களில் நாம் ஃபாஸ்டாக் ரீசார்ஜ் செய்ய மறந்து விடலாம். அத்தகைய சூழ்நிலையில் பாஸ்டேக் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படும். இதனால், கட்டணம் செலுத்த இயலாது. குறைந்த இருப்பு, KYC புதுப்பிக்கப்படவில்லை, வாகன சேஸ் எண் மற்றும் பதிவு எண்ணில் பிழை உள்ளிட்ட பல காரணங்களால் உங்கள் Fastag தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிகளின் தாக்கம்
உங்கள் வாகனம் டோல் பிளாசாவை அடையும் போது, ஏற்கனவே பிளாக் செய்யப்பட்ட ப்பட்டியலில் இருந்தால், உடனடியாக ரீசார்ஜ் செய்த பிறகும் கூட, டோல் பிளாசாவில் பணம் செலுத்த முடியாது. அதோடு, அபராதமாக இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். டோல் பிளாசா வழியாக வாகனத்தில் செல்லும்போது, அந்த நேரத்திற்கும் உங்கள் FASTag பிளாக் செய்யப்பட்ட நேரத்திற்கும் இடையிலான நேர இடைவெளியின் அடிப்படையில் உங்கள் பரிவர்த்தனை சரிபார்க்கப்படும். வாடிக்கையாளரின் பேஸ்டேக், டொல் கட்டண ரீடிங் நேரத்திற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு முதல் 10 நிமிடங்கள் வரை பிளாக் செய்யப்பட்டு, ஆக்டிவ் ஆக இல்லை என்றால், உங்கள் கட்டணம் நிராகரிக்கப்படும்.
குறைந்த FASTag இருப்பு உள்ள பயனர், டோல் கேட் பார்வைக்கு வரும்போது, தங்கள் கணக்கில் பணத்தை சேர்க்க முடியாது, ஏனெனில் அவர்களின் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதேபோல், FASTag ஹாட்லிஸ்ட்/பிளாக்லிஸ்ட்டில் உள்ளவர்கள், இந்தப் பட்டியல்களிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனால் பரிவர்த்தனை நிராகரிக்கப்படாமல் இருப்பதோடு டோல் பூத்களில் இருக்கும்போது அவர்கள் எந்த சிரமங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது.
உங்கள் ஃபாஸ்டாக் பட்டியலில் வைக்கப்பட்ட நிலையில், இந்தக் காலகட்டத்தில் நீங்கள் கட்டணத்தைத் தாண்டினால், உங்களிடம் இரு மடங்கு கட்டணம் விதிக்கப்படும். இருப்பினும், டேக் ரீடிங் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குள் நீங்கள் ரீசார்ஜ் செய்தால், அபராதத் தொகையைத் திரும்பப் பெற நீங்கள் கோரலாம். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்த உதவும். இருப்பினும், இந்த தகவலை டோல் பிளாசாவில் புதுப்பிக்க 20 நிமிடங்கள் வரை ஆகலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Fastag இருப்பை பராமரிக்கவும்
அபராதமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்க்க விரும்பினால், எப்போதும் உங்கள் Fastag இருப்பை பராமரிக்க வேண்டும். நீங்கள் காரில் எங்காவது செல்கிறீர்கள் என்றால், உங்கள் Fastag-ல் பேலன்ஸ் இல்லை என்றால், 1 மணி நேரத்திற்கு முன்பே அதற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
உங்கள் ஃபாஸ்டேக் பிளாக்லிஸ்ட் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
1. முதலில் போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
2. அங்கு இ-சலான் நிலையை சரிபார்க்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இதற்குப் பிறகு உங்கள் வாகனப் பதிவு எண்ணை உள்ளிடவும்.
4. உதவியுடன், உங்கள் வாகனஃபாஸ்டேக் பிளாக்லிஸ்ட் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியலாம்.
மேலும் படிக்க | இந்தோனேஷியா முதல் ஹங்கேரி வரை... ரூபாயின் மதிப்பு அதிகம் உள்ள சில நாடுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ