Max Movie OTT: கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான “மேக்ஸ்” திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.
இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் பாட்ஷா கிச்சா சுதீப்பின் மாஸ் அவதாரத்தில் உருவாகியுள்ள “மேக்ஸ்” திரைப்படம் பிரம்மாண்ட ஆக்சன் அதிரடிப் படமாகும்.
2024 ஆம் ஆண்டின் மிக அதிக வருவாய் ஈட்டிய கன்னடப் படமான “மேக்ஸ்” இன்று முதல் ZEE5ல் கன்னடத்துடன், தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டு ஸ்ட்ரீமாகிறது.
இந்த கதையானது தனி ஒருவனின் தைரியம், சர்வைவல் மற்றும் பழிவாங்கலைச் சுற்றி ஒரு பரபரப்பான திரை அனுபவத்தைத் தருகிறது. ஒவ்வொரு நொடியும் பரபரக்க வைக்கும், இப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றியை பெற்றது.
பாட்ஷா சுதீப்புடன் இணைந்து, இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சாம்யுக்தா ஹோர்னாட், ஸுக்ருதா வாகிளே, சுனில் மற்றும் அனிரூத் பட் போன்ற பல பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேக்ஸ் படம் 2024 ஆம் ஆண்டின் மிக அதிக வருவாய் ஈட்டிய கன்னடப் படம் எனும் சாதனையை செய்துள்ளது. தற்போது ZEE5 இல் இப்படம் டிஜிட்டல் பிரீமியர் ஆகிறது.
“Max” திரைப்படத்தின் கதை: போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள அர்ஜூன் தனது பதவியேற்புக்கு ஒரு நாள் முன் அந்த ஊருக்கு வருகிறார். அந்த ஒரு இரவில் நடைபெறும் அதிரடி திருப்பங்கள், பரபர சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.