Unified Pension Scheme: வரும் 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுபிஎஸ் திட்டத்தை 2024 ஆகஸ்ட் மாதம் 24ம் தேதியன்று மத்திய அமைச்சரவை அங்கீகரித்தது. பின்னர் நிதி அமைச்சகம் இந்த ஆண்டு ஜனவரி 25 அன்று திட்டத்தை அறிவித்தது.
ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தை விரும்பும் ஊழியர்களுக்கு UPS சிறந்த தேர்வாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்னும் புதிய திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன?, ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும்?, யாருக்கு எந்த வகையில் பலன் கிடைக்கும்? போன்ற பல விதமான கேள்விகளுக்கான பதில்களை இந்த கட்டுரையில் பெறலாம்...
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பின்படி, தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS திட்டம் பொருந்தும். 2025 ஏப்ரல் 1 முதல் அமலாகும் நிலையில், 23 லட்சம் அரசு ஊழியர்கள் யுபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். NPS திட்டத்தின் கீழ் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களும், வருங்கால மத்திய அரசு ஊழியர்களும் UPS திட்டத்தை தேர்வு செய்யலாம் அல்லது UPS விருப்பம் இல்லை என்றால் NPS திட்டத்தில் தொடரலாம்.
எவ்வளவு ஓய்வூதியம் வழங்கப்படும்
ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக பெறலாம். ஆனால் இதற்கு ஊழியர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிவது அவசியம். ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ உத்தரவாத ஓய்வூதியம் கிடைக்காது. ஊழியரின் குறைந்தபட்ச சேவை 25 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தால், விகிதாசார அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும். ஊழியரின் சர்வீஸ் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்தால், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 உத்தரவாத ஓய்வூதியம் அளிக்கப்படும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணையும் வழிமுறை
NPS திட்டத்தின் கீழ் உள்ள ஒரு ஊழியர், UPS திட்டம் செயல்படுத்தும் தேதியில் பணியில் இருக்கும் நிலையில், UPS விருப்பத்தை தேர்தெடுத்தால், அந்த ஊழியரின் நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்ணில் உள்ள நிதி UPS திட்டத்தின் கீழ் உள்ள ஊழியரின் தனிப்பட்ட நிதிக்கு மாற்றப்படும்.
மேலும் படிக்க | PM Kisan: 19வது தவணை யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? செக் செய்வது எப்படி?
ஓய்வூதியத்தில் அரசின் பங்களிப்பு அதிகரிக்கும்
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் அரசின் பங்களிப்பு 14% ஆக உள்ளது. யுபிஎஸ் இந்த அரசாங்க பங்களிப்பை 18.5% ஆக அதிகரிக்கும். அதே நேரத்தில், ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% தொகையை யுபிஎஸ் திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்.
விருப்ப ஓய்வு மற்றும் மரணம் ஏற்பட்டால்...
ஒரு அரசு ஊழியர் குறைந்தபட்ச தகுதியான சேவைக் காலமான 25 ஆண்டுகளுக்குப் பிறகு விருப்ப ஓய்வு பெற்றால், UPS திட்டத்தின் கீழ் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம் அந்த ஊழியர் ஓய்வுபெறும் தேதியிலிருந்து தொடங்கும். ஆனால் ஊழியர்களின் சேவையில் இடைவிடாது தொடர்ந்து பணியாற்றியிருந்தால் மட்டுமே கிடைக்கும். ஓய்வூதியத்திற்குப் பிறகு பயனாளி இறந்துவிட்டால், அவர் இறப்பதற்கு முன் உடனடியாக அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவில் 60% வீதத்தில் குடும்ப ஓய்வூதியம் சட்டப்பூர்வமாக திருமணமான ஊழியரின் மனைவிக்கு வழங்கப்படும்.
மேலும் படிக்க | தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ் -பயிர் காப்பீடு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ