மைதா மாவு என்பது கோதுமையை இறுதியாக அரைத்து சுத்திகரித்துப் பெறப்படும் மாவு. கோதுமையில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது என்றாலும், இதனை ஆரோக்கியமான உணவு என்று கூற இயலாது. ஏனென்றால் கோதுமையில் இருந்து உமி, தவிடு நீக்கிய பிறகு அதனை மிகவும் மிருதுவாக அரைத்தால் அது மைதா. அதனால் இதில் நார் சத்து என்பது மருந்துக்கும் கிடையாது. இருப்பதெல்லாம் கார்போஹைட்ரேட் மட்டுமே.
மைதா என்றதும் நம் மனதில் முதலில் தோன்றும் உணவு பரோட்டா தான். பரோட்டா மட்டுமல்லாமல்ல, நமது அன்றாட உணவுகளில் மைதா மாவு நீக்கமற நிறைந்துள்ளது. வெள்ளை பிரட், பீட்சா, நூடுல்ஸ், பாஸ்தா, கேக்குகள், பிஸ்கட் வகைகள் என நம் அன்றாடம் சாப்பிடும் பல உணவுகள் மைதாவில் தயாரிக்கப்படுகின்றன. அதோடு பாதுஷா, குலாப் ஜாமுன், மைதா கேக் போன்ற இனிப்பு வகைகள் பல மைதா மாவில் தயாரிக்கப்படுகின்றன.
மைதா மாவில் செய்யப்பட்ட பொருட்கள் அனைவருக்கும் பிடித்தவையாக மாறிவிட்ட நிலையில், அவற்றை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். இது உடலில் பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக மைதா மாவு உண்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும், உடலின் எந்தெந்த பகுதிகளில் அது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதையும் விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மைதா மாவில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
செரிமான பிரச்சனைகள்
மைதா மிகவும் பதப்படுத்தப்பட்ட மாவு, இதில் நார்ச்சத்து இல்லை. எனவே இதனை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால், அது ஜீரணிக்க நேரம் எடுக்கும். இதனால் குடலில் ஒட்டிக்கொள்ளலாம். இதனால் மலச்சிக்கல், வாயு, அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதை தொடர்ந்து உட்கொள்வதால் செரிமான மண்டலம் பலவீனமடையும்.
எலும்புகள் பலவீனம்
மைதா மாவு தயாரிக்கப்படும் போது, அதில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் (Health Tips) அழிக்கப்படுகின்றன. இதை அதிகமாக உட்கொள்வது உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஏனெனில் இது எலும்புகளில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சும் ஆபத்தை கொண்டது. இதன் காரணமாக எலும்புகள் பலவீனமடையும். மூட்டு வலி, முழங்கால் வலி, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் அபாயம் அதிகரிக்கும்.
உடல் பருமன்
மைதா மாவில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. ஆனால் இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்காது. இதை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி பசி ஏற்படுகிறது. அதிக அளவு மாவு சாப்பிடுபவர்கள் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை சந்திக்கத் தொடங்குவதற்கு இதுவே காரணம்.
இதயம் தொடர்பான நோய்கள்
மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் கெட்ட கொழுப்பை (LDL) அதிகரிக்கின்றன மற்றும் நல்ல கொழுப்பை (HDL) குறைக்கின்றன. இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். அளவுக்கு அதிகமாக மாவு சாப்பிடுவதால் தமனிகளில் வீக்கம் மற்றும் அடைப்பு ஏற்படலாம், இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
இரத்த சர்க்கரை மற்றும் நீரிழிவு ஆபத்து
மைதா மாவு உடலில் குளுக்கோஸை வேகமாக அதிகரிக்கிறது. இதன் காரணமாக, இன்சுலின் அளவு சமநிலையற்றதாகி, டைப்-2 நீரிழிவு நோயின் அபாயம் அதிகரிக்கிறது. குறிப்பாக ஏற்கனவே நீரிழிவு நோயாளிகள், மைதா மாவு உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை.... இந்த உணவுகள் புற்றுநோயை வரவழைக்கும் ஆபத்தை கொண்டவை
சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள்
மைதா மாவு உடலில் இன்சுலின் அளவை பாதிக்கிறது, இது ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். இதனால் முகப்பரு, சரும அலர்ஜி, முடி உதிர்தல் மற்றும் முன்கூட்டிய முதுமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மைதா மாவு உணவு பாதிப்பை தவிர்க்க செய்ய வேண்டியவை
1. மைதா மாவுக்குப் பதிலாக கோதுமை, தினை, சாமை, போன்று தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
2. நார்ச்சத்து சார்ந்த உணவுகளை உண்ணுங்கள், இதனால் செரிமானம் நன்றாக இருக்கும்.
3. பிஸ்கட், ரொட்டி, பீட்சா மற்றும் நூடுல்ஸ் போன்ற மைதா மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை குறைவாக உட்கொள்ளுங்கள்.
4. ஆரோக்கியமான மற்றும் சரிவிகித டயட்டை பின்பற்றவும்.
மேலும் படிக்க | நான் வெஜ் சாப்பிட பிறகு இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க! உடலுக்கு ஆபத்து!
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ