64 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கலாம்... அதுவும் இந்தியன் ஆயில் பங்கில் - உண்மை தான், ஆனால்...

Instagram Viral Video: இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 64 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 14, 2025, 08:07 PM IST
  • சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100.80 ஆக உள்ளது.
  • இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ரூ.64 விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • அது எப்படி என்பதை இங்கு காணலாம்.
64 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கலாம்... அதுவும் இந்தியன் ஆயில் பங்கில் - உண்மை தான், ஆனால்... title=

Instagram Viral Video: இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாட பிரச்னையே தினந்தினம் உயர்ந்து வரும் விலைவாசி தான். காய்கறி செலவு தொடங்கி பள்ளிக் கட்டணம் வரை பல கட்டணங்கள் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கின்றன. பெரிய சேமிப்பாக பார்க்கப்படும் தங்கம் கூட தொடர்ந்து விலை எகிறியே வருகிறது. தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை மட்டுமே நிலையாக இருந்து வருகிறது. 

இருப்பினும், அதுவே நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய தலைவலிதான். சென்னையை பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 100.80 மற்றும் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.92.39 ஆக உள்ளது. அப்படியிருக்க, தற்போது இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் 64 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறதாம். ஆஹா... அனைத்து இந்தியன் ஆயில் பங்கிலும் இருக்கிறதா, இதில் ஏதும் சூழ்ச்சி இருக்கிறதா என்றும் நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. இதில் என்ன பின்னணி என்பதை இங்கு காணலாம்.

இந்தியா - பூட்டான் எல்லையில்...

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இது இந்தியாவில் இல்லையாம்... இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இந்தியாவில் தானே இருக்கும் என நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. ஆனால் அதுதான் இல்லை. சமீபத்தில் இந்தியர் ஒருவர் பூட்டானுக்கு சென்றிருக்கிறார். அங்குதான் பெட்ரோல் விலையை பார்த்து அவர் ஷாக் ஆகி உள்ளார். அந்த அனுபவத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதலங்களில் பதிவிட்டுள்ளார்.

முகமது அர்பாஸ் கான் என்பவர் சமீபத்தில் பூட்டான் நாட்டிற்கு பயணம் செய்துள்ளார். அங்கு பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இருந்துள்ளன. பூட்டானில் பாரத் பெட்ரோலியம் பங்கை பார்த்ததே அவருக்கு முதல் ஆச்சர்யம். ஆனால், அதைவிட அவரை மலைக்க வைத்தது பெட்ரோல் விலைதான். 

பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில்

இந்த பெட்ரோல் பங்க் இந்தியா - பூட்டான் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளதாம். இதுகுறித்து அர்பாஸ் வெளியிட்ட வீடியோவில்,"பூட்டானில் ஒரு அற்புதமான சம்பவம் நடந்தது. நான் இப்போது பூட்டானில் இருந்து பேசுகிறேன். பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உள்ளன. இவை இந்திய பெட்ரோல் பங்குகள்தான். ஆனால் இங்கு பெட்ரோல் விலையை சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள்" என பேசியிருந்தார்.

பூட்டானில் பெட்ரோல் விலை எவ்வளவு?

அதாவது, ஒரு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டரின் விலை ரூ.63.92 ஆகும். அதாவது, அந்த வீடியோவில் பெட்ரோல் பங்கில் 63.92 என பூட்டான் நாணயத்தில் குறிப்பிட்டிருந்தாலும், பூட்டானிய நகுல்ட்ரம் மற்று் இந்திய ரூபாய் இரண்டும் மதிப்பு தானாம். அப்படியிருக்க இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100க்கும், பூட்டான் எல்லையில் ரூ.64க்கும் விற்கப்படுவதுதான் அர்பாஸ் உள்பட பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அர்பாஸின் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 73 லட்சம் வியூஸ் வந்துள்ளது. பலரும் இந்த வீடியோவில் தங்களின் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

நெட்டிசன்கள் வருத்தம்

ஒரு இன்ஸ்டா பயனர் அவரது கமெண்டில், இந்தியாவில் இருந்து பெட்ரோலை வாங்கி எப்படி இந்த குறைந்த தொகைக்கு விற்பனை செய்கின்றனர் என கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், அதற்கு மற்றொரு பதிவரின் கமெண்ட் பதிலளாக அமைந்தது. அதாவது,"இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் அதன் மீது விதித்துள்ள வரிகளே காரணம். வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என பதிவிட்டிருந்தார். மேலும், பலரும் அரசு பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று தங்களின் வருத்தத்தையும் கோரிக்கையாக பதிவிட்டு வந்தனர்.

மேலும் படிக்க | மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்... உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

மேலும் படிக்க | காதலன் வாடகைக்கு... ஒரு நாள் கட்டணம் எவ்வளவு தெரியுமா? நம்ம இந்தியாவில்...
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News