மத்திய அரசின் சோலார் மின் திட்டமான பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) என்ற திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. 1 கோடி குடும்பங்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் 2024 பிப்ரவரி 13ம் தேதி, அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. அரசின் இந்த முயற்சி மின்சார செலவை மிச்சப்படுத்துவதோடு மட்டுமின்றி புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
மத்திய அரசின் சோலார் மின் திட்டம் மூலம், ஜனவரி 27, 2025 வரை, 8.46 லட்சம் குடும்பங்கள் பலனைப் பெற்றுள்ளன. சோலார் பேனல்களை நிறுவும் குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.15,000 கூடுதல் வருமானமும் பெறுகின்றனர். இந்த திட்டம் எரிசக்தியில் தன்னிறைவுக்கான ஒரு பெரிய படியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சோலார் பேனலை நிறுவுவதற்கான செலவு மற்றும் மானியம்
உங்கள் வீட்டில் சோலார் பேனல்களை நிறுவ விரும்பினால், அதற்கான மானியத்தையும் அரசு வழங்குகிறது. 2 கிலோவாட் வரையிலான சோலார் பேனல்களை நிறுவ மொத்த செலவில் 60% அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படும். 3 கிலோவாட் வரையிலான சோலார் பேனல்களை நிறுவ, கூடுதல் 1 கிலோவாட்டிற்கு 40% மானியம் வழங்கப்படும். 3 கிலோவாட் சோலார் பேனல்களை நிறுவ தோராயமாக ரூ.1.45 லட்சம் செலவாகும், இதில் ரூ.78,000 அரசு செலுத்தும். மேலும், 67,000 மீதித் தொகைக்கு அரசு குறைந்த வட்டியில் வங்கிக் கடன்களும் வழங்கப்படுகின்றன.
சோலார் பேனலை நிறுவ விண்ணப்பம் செய்வதற்கான செயல்முறை
1. போர்ட்டலுக்குச் சென்று பதிவு செய்யுங்கள்.
2. உங்கள் மின் இணைப்பின் நுகர்வோர் எண், பெயர், முகவரி மற்றும் தேவையான கிலோவாட் சூரிய மின்சக்தி ஆகியவற்றை உள்ளிடவும்.
3. டிஸ்காம் நிறுவனங்கள் உங்கள் விண்ணப்பத்தைச் சரிபார்த்து, அதனை செயலாக்க தொடங்கும்.
4. போர்ட்டலில் ஏற்கனவே பதிவு செய்த விற்பனையாளர்களிடமிருந்து உங்களுக்கு விருப்பமான விற்பனையாளரை நீங்கள் தேர்வு செய்யலாம்.
5. சோலார் பேனல்களை நிறுவிய பிறகு, டிஸ்காம் மூலம் நிகர அளவீடு நிறுவப்படும்.
6. நிகர அளவீட்டுக்குப் பிறகு, அரசாங்கம் மானியத்தை உங்கள் கணக்கிற்கு அனுப்பும்.
சோலார் திட்ட பலனைப் பெற தேவையான ஆவணங்கள்
1. ஆதார் அட்டை
2. முகவரி ஆதாரம்
3. மின் கட்டணம்
4. வருமான சான்றிதழ்
5. மொபைல் எண்
6. வங்கி பாஸ்புக்
7. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
8. ரேஷன் கார்டு (தேவைப்பட்டால்)
2027 மார்ச் மாதத்திற்குள் 1 கோடி வீடுகளில் சோலார் பேனல் அமைக்க திட்டம்
2025 மார்ச் மாதத்திற்குள் சுமார் 10 லட்சம் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்படும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. 2025 அக்டோபர் மாதத்திற்குள் 20 லட்சம் வீடுகளில் சோலார் பேனல்களையும், 2026 மார்ச் மாதத்திற்குள் 40 லட்சம் வீடுகளில் சோலார் பேனல்களையும், 2027 மார்ச் மாதத்திற்குள் 1 கோடி வீடுகளில் சோலார் பேனல்களையும் பொருத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் படிக்க | EPFO வட்டி விகிதம் அதிகரிக்குமா... பிப்ரவரி இறுதியில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க | EPFO அதிரடி: 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், எப்போது அறிவிப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ