Anbil Mahesh Latest News | தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்துகிறது. ஆனால், கல்வித்துறையில் இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் மாநிலமாக இருக்கும் நாங்கள் இருமொழிக் கொள்கையுடன் மட்டுமே இருப்போம், இந்தி மொழியை அனுமதித்தால் தமிழ்நாட்டின் தாய்மொழி காலப்போக்கில் காணாமல் போகும் என திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு அதனை ஏற்க மறுக்கிறது. இதனையொட்டி மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தராமல் நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், " தமிழகத்திற்கான கல்வி நிதி நிலுவையில் இருப்பது எனக்கு தெரியும். அம்மாநில அரசு, அரசியல் காரணங்களுக்காகவே புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுக்கிறது. மும்மொழிக்கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது. தமிழக அரசு இரு மொழிக்கொள்கையை சொல்லி மக்களை குழப்புகிறது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழை படிக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. இதனை ஏற்காததால்தான் தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ. 2152 கோடியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் நிதியை வழங்க முடியும்" என்று தெரிவித்தார்.
இதற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் கொடுத்தார். அதில், " இதில் சுமார் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது. இந்தியாவிலேயே கல்வித்துறையில் கேரளா, தமிழ்நாடு தான் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. ஆனால், உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மிக குறைவான செயல்திறனை கொண்டிருக்கும்போது அவர்களுக்கு நிதி ஒதுக்குகிறார்கள். இது எந்தவகையில் நியாயம். மும்மொழிக் கொள்கை என்பது நமக்கு தேவையில்லாதது. எங்களை மிரட்டி அடிபணிய வைக்கப் பார்க்கிறீர்கள். இது கட்சிக்கான நிதி அல்ல. மாணவர்களுக்கான நிதி. அரசியல் பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று நீங்கள் சொல்வதே, இன்னொரு மொழிப்போரை தூண்டுவதுபோல் தான் அமைந்திருக்கிறது" என்று கூறியிருந்தார்.
மேலும், இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், " வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?
அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.
உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல,
இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல.
எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல.
இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். " -பேரறிஞர் அண்ணா கருத்தை தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கல்விக் கொள்கை வந்தால் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கூட பொதுத்தேர்வு எழுத வேண்டும். இது 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிராக அமையும். ஏனென்றால் மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக இருப்பதாக கல்வியாளர்கள் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை விமர்சிக்கின்றனர்.
மேலும் படிக்க - தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! சூப்பரான வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம்
மேலும் படிக்க - தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ் -பயிர் காப்பீடு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ