பத்ம பூஷன் விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு விழாவில் நடிகர் அஜித் கலந்து கொள்வாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று பத்ம விருது பெறுபவர்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
பத்ம விருதுகள் சமூக சேவை, கலை மற்றும் பல துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் விருது பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்றவர்களில் நடிகர் அஜித்குமார், பிரபல நடிகை ஷோபனா, பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகிய 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இன்று பத்மபூஷன் விருது பெற்றவர்களை கவுரவிக்கும் சிறப்பு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்த உள்ளார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்ள மாட்டார் என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெளிவுபடுத்தியுள்ளார்.
அஜித் கலந்து கொண்டால் அரசியல் ஆக்கப்படுமோ என்ற நோக்கில் அவர் கலந்து கொள்ள வில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.