GIG Workers Pension Scheme Latest Updates: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் கிக் தொழிலாளர்கள் விரைவில் ஓய்வூதியத் திட்டத்தின் பலனை அனுபவிக்க முடியும் என்று அறிவித்திருப்பது கிக் தொழிலாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
பட்ஜெட்டில் கிக் தொழிலாளர்களுக்கு சிறப்பு அறிவிப்புகள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தக்கலின் போது, இந்தியாவில் கிக் தொழிலாளர்கள் (Gig Workers) மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் பிம் ஜன் ஆரோக்கிய யோஜனாவின் (Pradhan Mantri Jan Arogya Yojana) கீழ் சுகாதார காப்பீட்டு பலனைப் பெறுவார்கள். என்று கூறினார்.
1 கோடி கிக் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்
மேலும் நகர்ப்புற தொழிலாளர்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு திட்டமும் செயல்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். இந்த புதிய நடவடிக்கை மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் பலன் அடைவார்கள் என்றும் அவர் கூறினார்.
கிக் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள்
அதுமட்டுமில்லாமல் 2025 பட்ஜெட் தாக்கல் செய்த போது, ஆன்லைன் தளங்களின் பணிபுரியும் கிக் தொழிலாளர்களின் சேவைப் பொருளாதாரத்திற்கு பெரும் உத்வேகத்தை வழங்குகிறது. அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து, எங்கள் அரசாங்கம் அவர்களின் அடையாள அட்டைகள் மற்றும் e-Shram போர்ட்டலில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.
கிக் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தின் பலன்
இதன்மூலம் மத்திய அரசு மின் வணிக நிறுவனங்களுடன் இணைந்து கிக் தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்திற்கான பணியை மேற்கொள்ள இருக்கிறது. விரைவில் இந்த அமைப்புசாரா துறை தொழிலாளர்களும் சமூகப் பாதுகாப்பின் கீழ் ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள். இதற்காக, அவர்களை ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (Employees Pension Scheme) சேர்க்க மத்திய அரசாங்கம் தயாராகி வருகிறது.
கிக் தொழிலாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பு உறுதி
விரைவில் மத்திய அரசாங்கம் கிக் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தின் பலன் திட்டத்தை அமைச்சரவையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க உள்ளது. இது அங்கீகரிக்கப்பட்டால் முதல் ஆண்டிலேயே சுமார் 1 முதல் 1.25 கோடி கிக் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள். இது அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் மற்றும் ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிக் தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகள் என்ன?
இந்தியாவில் உள்ள கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பின் பலன்களை அனுபவிக்கு வேண்டும் என்பதால், அவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், கிக் தொழிலாளர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து பணத்தை கட்ட வேண்டியதில்லை. அதாவது, கூடுதல் செலவு இல்லாமல் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.
இந்தியாவில் கிக் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்?
2029-30 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிக் பணியாளர்கள் 23.5 மில்லியனை எட்டும் என்று நிதி ஆயோக் (NITI Aayog) மதிப்பீடு செய்துள்ளது. எனவே கிக் தொழிலாளர்களின் நலன் கருதி, அவர்களின் எதிர்காலத்துக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கீழ் கிக் தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படுகிறது.
மேலும் படிக்க - EPFO அதிரடி: 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், எப்போது அறிவிப்பு?
மேலும் படிக்க - EPFO: உங்கள் PF கணக்கில் உள்ள பணத்தை அறியும் சில எளிய வழிமுறைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ