Champions Trophy, India | சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவின் ரெக்கார்ட் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபிக்காக துபாய் சென்றுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை இந்த டோர்மென்ட்டில் அனைத்து மேட்ச்களையும் துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியின் ஹோஸ்டாக பாகிஸ்தான் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. இதன் பிறகு, ஐசிசி இந்தியாவின் மேட்ச்களை துபாயில் நடத்த முடிவு செய்தது.
துபாயில் இந்திய அணியின் ரெக்கார்டு
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி 19 முதல் தொடங்க உள்ள நிலையில், இந்தியா துபாய் மைதானத்தில் சூப்பரான ரெக்கார்டு வைத்திருக்கிறது. இதுவரை அந்த மைதானத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து ஒருநாள் போட்டிகளையும் வென்றுள்ளது. அதாவது ஒரு போட்டியில்கூட தோற்கவில்லை. ரோகித் சர்மா தலைமைமியலான இந்திய அணி இதே மைதானத்தில் தான் ஆசிய கோப்பையையும் வென்றது.
துபாய் மைதானத்தில் இதுவரை
இந்திய கிரிக்கெட் அணி துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆறு ஒன்டே மேட்ச்கள் விளையாடியுள்ளது, அதில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு மேட்ச் டை ஆக முடிந்தது. இந்திய அணி இங்கு கடைசியாக 2018ல் பங்களாதேஷுக்கு எதிராக ஒன்டே விளையாடியது. துபாய் பிச் பொதுவாக ஸ்பினுக்கு சாதகமானது. இதை கருத்தில் கொண்டே இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர்களை சேர்த்திருக்கிறது. துபாய் மைதானத்தில் இந்திய அணி பாகிஸ்தானை இரண்டு முறை எதிர்கொண்டுள்ளது, இரண்டு மேட்ச்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
துபாய் மைதானத்தில் நடந்த போட்டிகள் விவரம்
2018- இந்தியா ஹாங்காங்கை 26 ரன்களில் வீழ்த்தியது.
2018- இந்தியா பாகிஸ்தானை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது.
2018- இந்தியா பங்களாதேஷை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது.
2018- இந்தியா பாகிஸ்தானை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தியது.
2018- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மேட்ச் டை ஆக முடிந்தது.
2018- இந்தியா பங்களாதேஷை 3 விக்கெட்டுகளில் வீழ்த்தியது.
துபாயில் நாக்அவுட் மேட்ச்கள்
இந்தியா செமிஃபைனலுக்கு தகுதி பெற்றால், இதே மைதானத்தில் அந்த போட்டியை மார்ச் 4 ஆம் தேதி விளையாடும். இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றால், இந்த மேட்ச் மார்ச் 9ஆம் மைதானத்தில் இதே துபாய் மைதானத்தில் நடக்கும். இல்லையென்றால் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி லாகூரில் உள்ள கதாஃபி ஸ்டேடியத்தில் நடைபெறும்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 குரூப்
குரூப் ஏ: பாகிஸ்தான், இந்தியா, நியூஜிலாந்து, பங்களாதேஷ்.
குரூப் பி: தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து.
சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவின் ஷெட்யூல்
பிப்ரவரி 20: இந்தியா vs பங்களாதேஷ்
பிப்ரவரி 23: இந்தியா vs பாகிஸ்தான்
மார்ச் 2: இந்தியா vs நியூஜிலாந்து.
மேலும் படிக்க | மார்ச் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2025! முதல் போட்டி யாருக்கு தெரியுமா?
மேலும் படிக்க | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நேரடி ஒளிபரப்பு மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ