வரும் பிப்ரவரி 19ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் துபாய்க்கு சென்றுள்ளனர். 15 பேர் கொண்ட இந்திய அணியில் இன்னும் சிலர் மட்டும் ஓரிரு தினங்களில் செல்ல உள்ளனர். இந்நிலையில் கூடுதல் வீரராக அணியில் இடம் பெற்றுள்ள ஜெய்ஸ்வாலுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. நாக்பூரில் உள்ள ஜம்தாவில் விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தின் போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரஞ்சியில் மும்பை அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற்று இருந்த ஜெய்ஷ்வால் பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக ஜெய்ஸ்வால் பெங்களூரில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்திற்குச் சென்று சிகிச்சை பெறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. "இடது கணுக்கால் வலியால் அவதிப்பட்டு வரும் ஜெய்ஸ்வால் ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாட மாட்டார். நாக்பூரில் பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு வலி அதிகமானது. ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்தில் மீண்டும் வலி அதிகரித்துள்ளது. NCA அவரில் கூடுதல் மருத்துவ உதவி வழங்கப்படும்" என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நேரடி ஒளிபரப்பு மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்!
சாம்பியன்ஸ் டிராபியில் சிக்கலா?
ஜெய்ஸ்வால் காயம் அதிகரித்தால் அவருக்கு பதில் சாம்பியன்ஸ் டிராபியில் வேறொருவரை ரிசர்வ் வீரராக பிசிசிஐ அறிவிக்க வேண்டும். தற்போது ரிசர்வ் வீரர்களாக ஜெய்ஷ்வால், துபே மற்றும் சிராஜ் உள்ளனர். இருப்பினும் ஜெய்ஷ்வால் காயம் மும்பை அணிக்கு தான் பெரிய இழப்பு என்று கூறப்படுகிறது. நாக்பூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இருப்பினும் 15 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். அணியில் டாப் ஆர்டரில் இடம் இல்லாததால் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வருண் சக்கரவர்த்தி எழுச்சி
ஜெய்ஸ்வாலுக்கு பதில் அணியில் வருண் சேர்க்கப்பட்டுள்ளார். அக்டோபர் 2024 முதல் 12 இன்னிங்ஸ்களில் 11.25 சராசரி மற்றும் 7.18 என்ற பொருளாதாரத்தில் 31 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் வருண் சக்கரவர்த்தி. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய வருண் சக்கரவர்த்தி தற்போது சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம் பெற்றுள்ளார். 5 டி20 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் தொடர் நாயகன் விருதையும் வென்றார். பிறகு கட்டாக்கில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் சக்கரவர்த்தி விளையாடினார். அதில் 10 ஓவர்களில் 1/54 என்று சிறப்பாக பந்து வீசி இருந்தார்.
மேலும் படிக்க | மார்ச் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2025! முதல் போட்டி யாருக்கு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ