How To Preserve Chutney Without Fridge? நம் இல்லத்தில் சமைக்கும் உணவுகளில் சட்னி என்ற ஒன்று இன்றிலமையாத உணவாக மாறி விட்டது. வீட்டில் அந்த காலத்தில் அம்மியில் அரைக்க ஆரம்பித்ததில் இருந்து, இப்போது மிக்சி ஜாரில் அரைப்பது வரை வளர்ந்து விட்டோம். ஆனால், அவற்றை நமது உணவில் சேர்க்கும் வழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. இது, நமது சாப்பாட்டுக்கு மேலும் சுவை சேர்ப்பதோடு நம் நாவில் இன்னும் சில மணி நேரம் சுவை தங்க வைக்கவும் உதவுகிறது.
ஆனால், இந்த சட்னிக்களை சூடாக இட்லிக்கும் தோசைக்கும் சாப்பிடும் போது அரைப்போம். அதன் பிறகு அது மீதமானால், அதனை தூக்கி போட மனம் வராமல் ஒன்று வெளியிலேயே வைத்து விடுவோம், அல்லது ஃப்ரிஜ்ஜில் வைத்து விடுவோம். இதனை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாமல் இருக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருக்கும். அதற்கான சில சிம்பிள் ட்ரிக்ஸ் குறித்து இங்கு பார்ப்போம்.
சூடான கடுகு எண்ணெய்:
நீங்கள் என்ன சட்னி அரைத்தாலும் அதனுடன் கடுகு எண்ணெய் சேர்ப்பது உங்களது சட்னியை கெட்டுப் போகாமல் வைத்திருக்கும். இந்த எண்ணெயில் ஒரு உணவு கெட்டுப்போகாமல் வைத்திருப்பதற்கான குண நலன்கள் இருக்கின்றது. என்ன சட்னி அரைத்தாலும் அதனுடன் இந்த கடுகு எண்ணெயை நன்கு சேர்த்து கலந்து வைத்து விடுங்கள். அப்போது உங்கள் சட்னி நீண்ட நேரத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.
வெல்லம் அல்லது சர்க்கரை சிரப்:
நீங்கள் இனிப்பு உணவு கலந்த சட்னியை அரைக்கும் போது அதனுடன் வெள்ளம் அல்லது சர்க்கரை சிரப் சேர்க்கலாம். இதனால் உங்களது சட்னி நீண்ட நேரத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்கும். இது உங்கள் சட்னி, fresh-ஆக கெட்டுப் போகாமல் வைத்திருக்கும். இந்த சிம்பிளான சிரப், உங்கள் சட்னி அதே ஃப்ளேவருடன் நீடித்து இருக்க உதவும்.
சட்னி க்யூப்ஸை ஃப்ரீஸ் செய்வது:
சட்னியை ஐஸ் க்யூப்ஸை ஃப்ரீஸ் செய்து வைப்பது, சட்னியை நீண்ட நேரத்திற்கு பதப்படுத்தி வைக்க உதவும். இதனை, ஐஸ் ட்ரேயில் ஊற்ற் வைத்து அதில் பட்டர் அல்லது எண்ணெய் சேர்த்து வைக்கலாம். இதனால், எந்த அளவிற்கு வேண்டுமோ அந்த அளவு மட்டும் அவ்வப்போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம். இதனால் சட்னியும் நீண்ட நேரத்திற்கு கெடாமலும் இருக்கும்.
பாதுகாக்கும் பாத்திரங்கள்:
நீங்கள் சட்னியை எந்த பாத்திரத்தில் பாதுகாத்து வைக்கிறீர்கள் என்பதை வைத்தும் அந்த சட்னி எத்தனை மணி நேரத்திற்கு தாங்கும் என்பதை கணிக்க முடியும். அதை சரியாக பாதுகாக்க வேண்டியது நல்லது. எதில் சட்னியை ஊற்றி வைக்கப்போகிறீர்களோ, அந்த ஜாரை அல்லது பாத்திரத்தை தண்ணீரில் வைத்து 10-15 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும். சட்னியை ஊற்றி வைக்கும் முன்பு அந்த ஜார் உள்ளிருந்து தண்ணீர் இல்லாமல் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அதன் பிறகு அதில் சட்னியை ஊற்றி வைத்தால், அது நீண்ட நேரத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.
வினீகர் அல்லது எலுமிச்சை:
ஆசிட் இருக்கும் வினீகர் அல்லது எலுமிச்சை என்பது உணவு பொருளுக்கு சுவை கூட்டும். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்த உணவு கெட்டுப்போகாமலும் வைத்திருக்கும். அதோடு, அந்த உணவு பொருளில் கெட்டுப்போகும் தன்மை என்ன இருக்கிறதோ, அது பரவாமல் தவிர்க்கவும் செய்யும். இதனால், சட்னியை அரைத்த பின்பு அதில் லெமன் அல்லது வினீகர் சேர்த்து வைக்கலாம். இதனால், சட்னி நீண்ட நேரத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்குமாம். நீண்ட நேரத்திற்கு இது கெட்டுப்போகாமலும் இருக்கும்.
மேலும் படிக்க | உங்களை காலி செய்ய நினைப்பவர்களை ஸ்மார்டா சமாளிக்கலாம்! சைலண்டா ‘இதை’ பண்ணுங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ