Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி மாசி மாதத்தின், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. தென்னாடுடைய சிவபெருமானை, மகா சிவராத்திரி நன்னாளில், சிவனை வணங்கி பூஜிப்பவர்களுக்கு, வாழ்க்கையில் இன்னல்கள் விலகி இன்பங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த நாள்
மகா சிவராத்திரி அன்று, சிவபெருமானுடன், அன்னை பார்வதி தேவியையும் வணங்குபவர்கள், மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவார்கள். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும், திருமணம் நடந்த நாள் தான் என்ன சிவராத்திரி என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. அன்று பக்தர்கள், விரதம் இருந்து, இரவில் கண் விழித்து, சிவனை வணங்கி அவனது அருளை பரிபூரணமாக பெறுகின்றனர்.
ஜோதிடத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி தினம் ஆன்மீகத்தில் மட்டுமல்ல, ஜோதிடத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிரக தோஷங்கள் நீங்க, சிவபெருமானை வழிபடுவது பலன் தரும். சிவ பக்தர்களை சனி பகவான் சோதிக்க மாட்டார் என்பது ஐதீகம். எனவே மகா சிவராத்திரி நன்னாளில், இன்னல்களை தீர்க்கும் சிவபெருமானை வணங்கினால், எழரை நாட்டு சனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள்
கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவான், ஏழரை நாட்டு சனி காலத்தில் மனிதர்களைப் பாடாய்படுத்தி எடுப்பார். இந்நிலையில், சிவபெருமானின் அருளால், மலை போல் வந்த துன்பங்கள் அனைத்தும், பனி போல் விலகி நிம்மதியான வாழ்வைப் பெற, மகா சிவராத்திரி உதவும்.
மேலும் படிக்க | மகா சிவராத்திரி 2025: சிவனின் அருள் பரிபூரணமாக கிடைக்க... வாங்க வேண்டிய 5 பொருட்கள்
ஏழரை நாட்டு சனி பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற, சிவபெருமானை மகிழ்விக்க செய்ய வேண்டியவை:
1. சிவராத்திரி அன்று, ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை ஜெபித்தபடி சிவலிங்கத்திற்கு நீர் அல்லது பால் கொண்டு அபிஷேகம் செய்தால், சிவபெருமானின் மனம் குளிரும்.
2. சிவ லிங்கத்திற்கு தயிர் கொண்டு அபிஷேகம் செய்வதும், விசேஷ பலன்களை அள்ளிக் கொடுக்கும். இதனால் பல வகையான கிரக தோஷங்கள் நீங்கி வளமான வாழ்க்கையை பெறலாம்.
3. சிவனுக்கு உகந்த வில்வ இலை கொண்டு லிங்கத்திற்கு அர்ச்சனை செய்வது, சிவபெருமானின் மனதை குளிர்விக்கும். இதனால் ஏழரை நாட்டுச் சனியின் பாதிப்பு விலகும்.
4. ருத்ரனாக இருக்கும் சிவபெருமானின் மனதை குளிர்விக்க குளிர்ச்சியான சந்தனம் உதவும். லிங்கத்திற்கு சந்தனத்தால் அலங்காரம் செய்வதன் மூலம், சிவனின் அருளை பரிபூரணமாக பெறலாம்.
5. சிவலிங்கத்தை ருத்ராட்சம் கொண்டு அலங்கரிப்பதன் மூலம், சிவபெருமானின் அருளைப் பெறலாம். சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானது தான், ருத்ராட்சம் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஏழரை நாட்டு சனி பாதிப்பு உள்ள ராசிகள்
நீதிக்கடவுளான சனி பகவானின் பெயர்ச்சியின் அடிப்படையில், எழரை நாட்டு சனி, அஷ்டமச்சனி ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. ஒன்பது கிரகங்களில், மிகவும் மெதுவாக நகரும் தன்மை கொண்ட சனி பகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை, தனது ராசி மாற்றிக் கொண்டு பெயர்ச்சி ஆகிறார். 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி, சனிபகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனிப்பெயர்ச்சியின் காரணமாக, மீன ராசியினருக்கு, ஜென்ம சனி காலம் தொடங்கும். கும்ப ராசியினருக்கு பாத சனி காலம் தொடங்கும். மேஷ ராசியினருக்கு விரைய சனி காலம் தொடங்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் இவைதான்: சிவன் அருளால் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ