இந்தியாவில் வெளிநாடு சென்று கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் மாணவர்களின் முதல் தேர்வாக உள்ளது. பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்த உடனேயே, இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற, வெளிநாடு சென்று படிக்க விரும்புகின்றனர். இந்நிலையில், வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கான முக்கிய செய்தியை அறிந்து கொள்ளலாம்.
மொத்தம் 75 மாணவர்களுக்கு உதவித்தொகை
இங்கிலாந்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம், இந்தியர்கள் உட்பட சர்வதேச மாணவர்களுக்கு 2025ம் ஆண்டுக்கான முதுகலை படிப்பிற்கான ஸ்காலர்ஷிப், அதாவது சர்வதேச கல்வி உதவித்தொகையை (Scholarship) வழங்குகிறது. பல்கலைக்கழகம் 75 சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்கும், ஒவ்வொன்றும் 10,000 பவுண்டுகள் (தோராயமாக ரூ. 11 லட்சம்) மதிப்புள்ளவை எனவும் கூறப்படுகிறது. இந்த உதவித்தொகை செப்டம்பர் 2025-ல் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை தொடரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கிடைக்கிறது.
ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான தகுதி
1. விண்ணப்பதாரர்கள் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்திலிருந்து சேர்க்கை சலுகை கடிதத்தை பெற்றிருக்க வேண்டும்.
2. முதுகலை பாடத் திட்டம் 2025 செப்டம்பரில் தொடங்கப்பட வேண்டும்.
3. இந்த உதவித்தொகை வளாகத்தில் முதுகலை படிப்பிற்கான திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
4. தொலைதூரக் கல்வி மாணவர்கள் நிதியுதவிகளைப் பெறுபவர்கள் தகுதியற்றவர்கள்.
5. மார்ச் திட்டம் அல்லது மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு செயல்முறை
மாணவர்களின் விண்ணப்பங்களை மூத்த பல்கலைக்கழக உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழு மதிப்பாய்வு செய்யும். விண்ணப்பதாரகள் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் தொடர்புடைய கல்வித் திறமை மற்றும் தொழில்முறை சாதனைகளை நிரூபிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கடந்தகால சாதனைகள் அவர்களின் படிப்புடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதை தேர்வுக் குழு மதிப்பிடும்.
மேலும் படிக்க | இந்தோனேஷியா முதல் ஹங்கேரி வரை... ரூபாயின் மதிப்பு அதிகம் உள்ள சில நாடுகள்
விண்ணப்பிக்கும் முறை
ஷெஃபீல்ட் பல்கலைக்கழக சர்வதேச முதுகலை கற்பித்தல் தகுதி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 12, 2025 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உதவித்தொகையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகளுக்கு, மாணவர்கள் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
மேலும் படிக்க | மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா - மத்திய அரசு தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ