Valentine's Day 2025, Rent A Boyfriend: இன்று காதலர் தினம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் உறவில் இருப்பவர்கள் சுற்றுலா செல்வது, தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்வது என இன்றைய நாளை மறக்க முடியாத நாளாக கொண்டாட வேண்டும் என நினைப்பார்கள். காதலி/காதலன் இல்லாதவர்கள் நிலைமை இன்னும் மோசம். அதுவும் காதல் தோல்வி, ஒருதலைக் காதலில் இருப்பவர்களின் நிலைமையை சொல்லவே வேண்டாம்.
Valentine's Day 2025: நவீன பிரச்னைகளுக்கு... நவீன தீர்வுகள்...
அப்படியிருக்க, இந்த காலகட்டத்தில் காதலை பேசுவதை போல், தனிமை உணர்வு குறித்தும் பேச வேண்டிய சூழல் உள்ளது. நவீன உலகம் அனைத்தையும் உள்ளங்கைக்குள் கொண்டுவந்தாலும் மனிதனின் தனிமையை போக்குவது, தனிமையால் ஏற்படும் மனநலப் பிரச்னைகளை போக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.
Valentine's Day 2025: காதலன் - காதலி வாடகைக்கு...
இருந்தாலும், நவீன உலகம் அதன் நவீனமயமான பிரச்னைகளுக்கு, நவீனமயமான தீர்வுகளையும் வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், சீனா, ஜப்பான், தாய்லாந்து போன்ர நாடுகளில் காதலி அல்லது காதலனை வாடகைக்கு எடுக்கும் பழக்கம் என்பது சமீப காலங்களில் பெரிய டிரெண்டாக உருவெடுத்துவிட்டது. அந்த டிரெண்ட் தற்போது இந்தியாவுக்கு வந்துவிட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா...?
Valentine's Day 2025: காதலனை வாடகைக்கு எடுக்க எவ்வளவு கட்டணம்?
இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி என அழைக்கப்படும் பெங்களூரு நகரத்தில் காணப்பட்ட 'காதலன் வாடகைக்கு...' என்ற போஸ்டர் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. காதலர் தினத்தை முன்னிட்டு நீங்கள் நாட்கணக்கிலும், வார கணக்கிலும் கூட காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடியுமாம். அந்த போஸ்டர் குறித்து இங்கு காணலாம்.
பெங்களூருவின் ஜெயாநகர் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில் ஒரு நாளைக்கு 389 ரூபாய் கொடுத்து நீங்கள் காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னெல்லாம் வாடகை சைக்கிள், வாடகை சேர், வாடகைக்கு ஆட்டோ உள்ளிட்ட விஷயங்களை பார்த்திருப்போம். இப்போது வாடைக்குக்கு காதலன் என்பது சற்றே அதிர்ச்சிகரமான ஒன்றுதான்.
Valentine's Day 2025: பெங்களூருவை அதிரவைத்த போஸ்டர்
பெங்களூருவில் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரில்,"இந்த காதலர் தினத்திற்கு, காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளுங்கள். தேவைக்கு, இதை ஸ்கேன் செய்யுங்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஜெயாநகரில் மட்டுமின்றி, பனாசங்கரி, பிடிஏ காம்பிளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்களை புகைப்படம் எடுத்து பலரும் X வலைதளத்தில் பதிவிட்டு, போலீசாரிடம் இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், இதுகுறித்து போலீசார் தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Valentine's Day 2025: இந்தியாவுக்கு இது புதிதல்ல
இது இந்தியாவில் வருவது முதல்முறையல்ல. 2018ஆம் ஆண்டே இதேபோன்ற காதலன் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாலம் என்ற போஸ்டர் மகாராஷ்டிர தலைநகர் மும்பையிலும் காணப்பட்டது. அதிலும் குறிப்பிட்ட அம்சங்கள் கொண்ட ஆண்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2022இல் பெங்களூருவிலும் இதைபோன்ற போஸ்டர்கள் முன்னரே காணப்பட்டன.
மேலும் படிக்க | மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்... உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
மேலும் படிக்க | கார் ஓட்டும் போது லேப்டாப்பில் வேலை பார்த்த பெண்! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ