பிரபல முன்னணி காதாநாயகிகளையெல்லாம் மிஞ்சிய இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளார். சமீபத்தில் இவர் நடித்த படங்களுக்குப் பலரும் ரீல்ஸ் செய்து வைப் செய்து மகிழ்ந்தது பேசுபொருளாக இருந்தது. அந்த கதாநாயகி யார் என்று பார்க்கலாம்.
தென்னிந்தியாவின் சிறந்த நடிகைகள் ஃபோர்ப்ஸ் இந்தியா 30 வயதுக்குக்ட்பட்டோர் பட்டியலில் இந்த இளம் நடிகை இடம்பிடித்துள்ளார். இது எதிர்பாராத ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளாக வளம் வருபவர்கள் சமந்தா, நயன்தாரா, த்ரிஷா, ராஷ்மிகா மற்றும் சாய் பல்லவி எனப் பல முன்னணி நடிகர்களுக்கெல்லாம் டஃப் கொடுத்துவிட்டார். யார் அந்த நடிகை என்று பார்ப்போம்.
திரையுலகில் பல புதுமுகங்கள் அறிமுகமானாலும் என்றும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்கள் நயன் தாரா, சமந்தா, ராஷ்மிகா, சாய் பல்லவி, ராஷ்மிகா, த்ரிஷா மற்றும் சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
ஒரு வகையில், இப்போது இருக்கும் டாப் நடிகைகளில் யார் இந்த ஒருவரின் பெயர் இன்றும் ரசிகர்கள் மனதில் டாப்பில் உள்ளது. அதுபோன்று தான் இந்த 30வயது இளம் நடிகையும் ரசிகர்களின் மனதில் டாப்பில் உள்ளார்.
2025 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் 30வயதுக்குட்பட்ட நடிகர்ளைக் கொண்ட 30பேர் பட்டியலில் தென்னிந்திய நடிகையான இவர் இடம்பிடித்துள்ளார்.
பிரபல அமெரிக்க பத்திரைக்கையான ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மிகவும் திறமையான 30பேர் கொண்ட பட்டியலை வெளியிடும் என்று கூறப்படுகிறது.
அவர் வேறு யாருமே இல்லை. தனுஷ் இயக்கிய “ராயன்” படத்தில் நடித்த அபர்ணா பாலாமுரளி ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர் வாட்டர் பாக்கெட் பாடலில் நடித்த நடிப்பும், நடனமும் ரசிகர்களை வெகுவாக கவந்தது. சமூக வலைத்தளத்திலும் மிகவும் டிரெண்டிங்கானது.
2025 ஆம் ஆண்டிற்கான 30 பிரபலமான நபர்களின் பட்டியலில் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த இவர் மட்டுமே இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் மலையாள திரைத்துறையில் நடித்தாலும் தமிழ் திரைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை எளிதில் பிடித்தது மிகவும் ஆச்சரியப்படவைத்தது குறிப்பிடத்தக்கது.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பால முரளி நடித்துள்ளார். இப்படத்தில் இவரது அட்டகாசமான நடிப்பை மேலும் ரசிகர்களைக் குஷியாக்கியது. தற்போது அமெரிக்கா ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பட்டியலில் இவர் பெயர் இடம்பிடித்தது எதிர்பாராத ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.