உங்களை காலி செய்ய நினைப்பவர்களை ஸ்மார்டா சமாளிக்கலாம்! சைலண்டா ‘இதை’ பண்ணுங்க..

7 Smart Ways To Deal With People That Hates You : நம்மை வெறுப்பவர்களை சமாளிக்க, பல சமயங்களில் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாது. அதற்கான சில சிம்பிள் வழிகளை இங்கு பார்ப்போம்.

7 Smart Ways To Deal With People That Hates You : நாம் அனைவராலும் விரும்பப்படும் போது, ஒரு சிலர் மட்டும் நம்மை கொஞ்சம் வித்தியாசமாக நடத்தினால் கடுப்பாக இருக்கும் இல்லையா? அவர்களுக்கு நம்மை பிடிக்காமல் போனதற்கு எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி நம்மை பிடிக்காமல் இருக்கும் நபர்கள், நம்முடன் வேலை பார்ப்பவர்களாகவோ, நம் நண்பர்கள் குழுவில் இருக்கும் ஒருவராகவோ கூட இருக்கலாம். இப்படி, உங்களை ஒருவர் பிடிக்காமல் சில விஷயங்களை செய்யும் போது அதனை எப்படி சமாளிக்க வேண்டும், அவர்களிடம் எந்த மாதிரியான பதில்களை கூற வேண்டும் தெரியுமா? அதற்கான டிப்ஸ் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

1 /7

உங்களை பிடிக்காதவர்கள் உங்களிடம் ஏதேனும் வந்து பேசும் போது அதற்கு நெகடிவாக ஏதேனும் பேசுவதோ, அவர்களை திட்டுவதோ எளிது. ஆனால், இது போன்ற சில விஷயங்களை நீங்கள் செய்கையில் அந்த சூழல் உங்களை கண்ட்ரோல் செய்வது போல ஆகிவிடும். இதை தடுக்க, அவர்கள் உங்களிடம் என்ன கூறினாலும் அதனை பாசிடிவாக கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.

2 /7

உங்களை பிறர் தூண்டி விட பார்க்கிறார்களா, என்பதை உற்று நோக்க வேண்டும். அப்போது, உணர்ச்சிவசப்படுவதை விட்டுவிட்டு அந்த நேரத்தில் நடுநிலையுடன் இருக்க வேண்டும். நீங்கள் கோபப்பட்டாலோ, அல்லது மனம் துன்பப்பட்டு அழுதாலோ அது அவர்களின் ஈகோவுக்கு தீனி போடுவது போல இருக்கும். எனவே, அவர்கள் அப்படி பேசும் போது அதனை காதிலேயே வாங்கிக்கொள்ள வேண்டாம்.

3 /7

உங்களை ஒருவர் எரிச்சல் படுத்த நினைக்கும் போது அந்த சமயத்தில் அமைதியாக அதனை கடந்து செல்வது கடினமானதாக இருக்கும். எனவே, அதனை முதலில் பொய்யாக நடிக்க கற்றுக்கொள்ளுங்கள். இப்படியே செய்தால், உங்களால், அவர்கள் எரிச்சல் படுத்தும் போது அதனை கடந்து சென்று விட முடியும்.

4 /7

நீங்கள் அந்த பிரச்சனைக்குரிய நபரிடம் பேசும் போது, சண்டை அதிகரித்தால் உங்களின் பேச்சுகளை உடனே நிறுத்தவும். உங்கள் மனதையும் உங்கள் உணர்ச்சிகளையும் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் இதனை செய்யலாம். அவர்களிடம் ஏதாவது வேலை ஆக வேண்டும் என்றால், அதற்குரிய விஷயங்களை மட்டும் பேசி, அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாதீர்கள்.

5 /7

பல சமயங்களில் நம்மால் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், வெறுப்பையும் பிரித்து பார்க்க முடியாது. இதனால், அந்த பிரச்சனைக்குரிய நபர் நம்மிடம் நல்ல விஷயங்களை கூறினாலும் கூட நமக்கு தவறாகவே தெரியும். எனவே, இதையும் பிரித்து பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.

6 /7

உங்களுக்கு ஒரு நபரின் மீது வெறுப்பு இருந்தால், அதனை நீங்கள் உங்களின் பிற வெறுப்புகளின் மீதும் காண்பிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதே போல உங்களை ஏதோ ஒரு முறை ஒருவர் வெறுத்திருந்தால் கூட, அடுத்தடுத்த வருடங்களில் அவர் உங்களை மதிக்கவும் பிடிக்கவும் கற்றுக்கொண்டிருக்கலாம். எனவே, அதே வெறுப்பை மனதில் வைத்துக்கொள்வதும் நல்லதல்ல.

7 /7

ஒருவர் உங்கள் மீது வெறுப்பை காட்டும் போது, நீங்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தாலே நீங்கள் அதில் பாதி ஜெயித்து விட்டதாக அர்த்தம். எனவே,  அப்படி ஒருவருக்கு உங்களை பிடிக்காமல் இருந்தால் அவரை கண்டுகொள்ளாமல் இருங்கள், அந்த விஷயத்தின் மீது கவனம் செலுத்தாமல் இருங்கள்.