அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய நபர்களை அந்தந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியர்களை அடிமைகள் போல நடத்தி கையில் விலங்குகளுடன் அமெரிக்காவின் ராணுவ விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கு பலதரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால் மத்திய அரசு இதனை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரில் சந்தித்து இருந்தார், அப்போதும் இது குறித்து எதுவும் பேசப்படவில்லை என்று தகவல்கள் வெளியானது.
மேலும் படிக்க | ’பிளாக்மெயில் வேண்டாம்’ மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
இந்நிலையில் விகடன் நிறுவனம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடியின் கைகள் டொனால்ட் ட்ரம்பால் கட்டப்பட்டது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. இதனால் கோபம் அடைந்த பாஜகவின் ஆதரவாளர்கள் கடுமை எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சகத்திடம் இது குறித்து புகாரையும் அளித்திருந்தனர். இதனை அடுத்து நேற்று இரவு விகடன் இணையதளம் முடக்கப்பட்டது என்று செய்திகள் வெளியானது. பலருக்கும் விகடன் இணையதளம் வேலை செய்யவில்லை. இந்நிலையில் இதனை கண்டித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து X தளத்தில், "மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம்…
— TVK Vijay (@TVKVijayHQ) February 16, 2025
மேலும் படிக்க | இன்னோர் மொழிப்போரை தூண்டுவது போல் உள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ