Yogi Babu Car Accident : தமிழ் திரையுலகின் முக்கிய காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் யோகி பாபு. இவரது கார் விபத்துக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்க்கலாம்.
யோகி பாபு:
கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகர்களாக இருந்து, பெரிய நடிகர்களாக வளர்ந்தவர்கள் ஏராளம். அப்படி வளர்ந்து வரும் நடிகர்களுள் யோகி பாபுவும் ஒருவர். இவருக்கு பெருமையை தேடித்தந்த படங்கள், ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள்தான். தனது நடிப்பிற்காக சில விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.
யோகி பாபுவிற்கு தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இப்பாேது, பெரிய நடிகர்களின் சில படங்களிலும் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர், படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், தற்போது இவர் சென்ற கார் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கார் விபத்து:
யோகி பாபு சென்ற கார், வாலாஜா பேட்டை சுங்கச்சாவடியில் அதிகாலை வேளையில் விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை, கார் இழந்ததால் இந்த நெடுஞ்சாலையின் தடுப்பு மீது கார் வேகமாக ஏறி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது. இதில், நடிகர் யோகி பாபு எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டது.
உண்மையா இல்லையா?
யோகி பாபுவுக்கு விபத்து என்ற தகவல் வெளியானவுடன், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், நலம் விரும்பிகள் என அனைவரும் பதறி விட்டனர். இதையடுத்து, யோகி பாபு ஒரு சமூக வலைதள பதிவை வெளியிட்டார். அவர் வெளியிட்டிருந்த பதிவில் செய்தியில் வந்த கார்டை போட்டு “இது ஒரு பொய்யான செய்தி, நான் நலமுடன் இருக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து, ஒரு ஆடியோவும் வெளியாகியுள்ளது. அதில், இரவில் யூனிட் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது பேரிகேடில் லைட்டாகி வண்டி உராசி விட்டதாகவும், யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை-அனைவரும் நலமாகவே உள்ளனர் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனால், இந்த தகவல் உண்மையில்லை என்று நிரூபனம் ஆகியிருக்கிறது. யோகி பாபு குறித்து, இப்படி பொய் தகவல் பரவுவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிடத்தக்கது.
யோகி பாபு நடிக்கும் படங்கள்:
நடிகர் யோகி பாபு, முதலில் சினிமா படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து கொண்டிருந்தார். ஆடியாளாக-சின்ன சின்ன க்ரெடிட்ஸ் கொடுக்காத கதாப்பாத்திரங்களில்தான் அவர் நடித்து வந்தார். ஆனால், யாமிருக்க பயமே படத்தில் அவர் நடித்த ‘பன்னி மூஞ்சி வாயன்’ கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அவருக்கு சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பிறகு ஹீரோவாக சில படங்களில் நடிக்க ஆரம்பித்து, இப்போது ஒத்த ஓட்டு முத்தையா படத்திலும் கவுண்டமணிக்கு இணையான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து குட் பேட் அக்லி, ராஜா சாப் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இப்படங்களில் சில ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன.
மேலும் படிக்க | ஜெய், யோகி பாபு நடித்துள்ள Baby & Baby படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
மேலும் படிக்க | யோகி பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? யம்மாடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ