கொலஸ்ட்ரால் முதல் டீடாக்ஸ் வரை... ABC ஜூஸ் தினமும் கட்டாயம் குடிங்க

ABC Juice Benefits: உங்களை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருக்க விரும்பினால், உங்கள் உணவில் ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏபிசி ஜூஸை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 16, 2025, 06:52 PM IST
  • ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் ஆகிய மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படும் சாறு.
  • ஏபிசி ஜூஸை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்.
  • ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் பானம் தயாரிப்பது எப்படி?
கொலஸ்ட்ரால் முதல் டீடாக்ஸ் வரை... ABC ஜூஸ் தினமும் கட்டாயம் குடிங்க title=

Health Drink: மாறி வரும் இன்றைய வாழ்க்கை முறையில் அனைவரும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பலருக்கு ஏற்பட்டுள்ளது. உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க, உங்கள் உணவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். நீங்கள் உங்களை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருக்க விரும்பினால், உங்கள் உணவில் ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட்டைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் ஆகிய மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படும் சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏபிசி ஜூஸ் என பிரபலமாக அழைக்கப்படும் இந்த ஜூஸை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன, அதை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்வோம்?

ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் பானம் தயாரிப்பது எப்படி:

ஒரு ஆப்பிள், 2 நடுத்தர அளவிலான கேரட் மற்றும் 1 சிறிய பீட்ரூட் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை தண்ணீரில் நன்கு கழுவவும். பீட்ரூட்டில் இருந்து தோலை நீக்கி, நறுக்கவும், மற்ற இரண்டையும் சுத்தம் செய்து கொள்ளவும் அனைத்து பொருட்களையும் சிறிய துண்டுகளாக நறுக்கவும். அவற்றை ஒரு பிளெண்டர் அல்லது ஜூஸரில் அரைக்கவும் சிறிது தண்ணீர் சேர்க்கவும். நன்றாக கலக்கவும். கலவையை வடிகட்டவும். சுவையை அதிகரிக்க, எலுமிச்சையை பிழிந்து சாறு கலந்து பரிமாறவும்.

ஏபிசி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

1. சிறந்த டீடாக்ஸ் பானம்: இந்த சாறு உங்கள் உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது . மேலும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது, இதனால் ஆற்றல் அபரிமிதமாக இருக்கும் நீங்கள் சோர்வாக உணரவே மாட்டீர்கள்.

2. உடல் எடை குறையும்: ஏபிசி ஜூஸில் குறைவான கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. எனவே இதை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுப்பதால், பசி குறைவாக இருக்கும்.

3. இதய ஆரோக்கியம்: பீட்ரூட் மற்றும் கேரட் ஆப்பிள் சேர்ந்த கலவை, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.மேலும் கொலஸ்ட்ராலை எரித்து இதயத்தை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதில் கரோட்டின் நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கும்.

மேலும் படிக்க | குடல் நச்சுக்கள் அழுக்குகளை நீக்கும் விளக்கெண்ணெய்... பயன்படுத்தும் சரியான முறை இது தான்

4. கண்பார்வை மேம்படும்: இந்த பானத்தை தினமும் ஒரு கிளாஸ் குடிப்பதால் உடலுக்கு போதுமான வைட்டமின் ஏ கிடைக்கும், இது உங்கள் கண் தசைகளை வலுப்படுத்தும். உங்கள் பார்வை திறனை அதிகரிக்கும். உங்கள் சோர்வான கண்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

5. பளபளப்பான சருமம்: ஏபிசி சாற்றை தினமும் குடித்து வந்தால், சருமம் சீரான நிறத்தையும், இயற்கையான பொலிவையும் பெறலாம். இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி, ஈ மற்றும் கே ஆகியவை சருமத்தை கறைகள், புள்ளிகள் மற்றும் முகப்பருவிலிருந்து விடுவிக்க உதவி செய்கின்றன.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | LDL கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்கும் சில சட்னி வகைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News