பிப்ரவரி 17 இன்று முதல் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாடு முழுவதும் உள்ள டோல்கேட்டில் FASTag மூலம் கட்டண வசூலின் திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த விதிமுறைகளின் முதன்மையான குறிக்கோள், சுங்கக் கட்டணம் செலுத்தும் செயல்முறையை ஒழுங்குபடுத்துதல், தாமதங்களைக் குறைத்தல் மற்றும் ஓட்டுநர்களுக்கான ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகும். இந்த புதிய கட்டமைப்பின் கீழ் ஒரு வாகனம் டோல் பிளாசாவிற்குள் நுழையும் போது அதன் FASTag கணக்கில் போதுமான நிதி இல்லை என்றால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக ஓட்டுநருக்கு தனது கணக்கை ரீசார்ஜ் செய்ய 60 நிமிடங்களுக்கு அவகாசம் வழங்கப்படும்.
FASTag கணக்கு
டோல் பிளாசாக்களில் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முன்முயற்சி கொண்டு வரப்பட்டுள்ளது. பல வாகனங்கள் தங்கள் FASTag கணக்குகளில் குறைந்த பணம் வைத்திருப்பதன் காரணமாக டோல் கேட்டில் நீண்ட நேரம் நிற்க நேரிடுகிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்களும் சிரமப்படுகின்றனர். மேலும் டோல்கேட்டில் இருந்து ரீசார்ஜ் செய்தாலும் உடனடியாக பணம் செலுத்த முடியவில்லை. இந்த புதிய விதிகளின்படி வாகனங்களுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சுங்க கட்டணத்தை இரட்டிப்பாக செலுத்த வேண்டும். இது ஓட்டுநர்கள் தங்கள் FASTag கணக்குகளில் போதுமான நிலுவைகளை பராமரிக்க ஊக்குவிக்கிறது.
FASTag கட்டண வசூல்
2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட FASTag தானியங்கி மூலம் கட்டணம் வசூலித்து, இந்தியாவில் சுங்கக் கட்டணம் செலுத்தும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. ரொக்கப் பரிவர்த்தனைகளால் நீண்ட நேரம் தாமதமான நிலையில் இதன் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடிகள் வழியாக தடையின்றி செல்ல இது அனுமதிக்கிறது. மேலும் காத்திருப்பு நேரத்தையும் கணிசமாகக் குறைக்கிறது. இருப்பினும், பல பயனர்கள் தங்கள் FASTag கணக்குகளில் போதுமான பேலன்ஸ் வைத்து கொள்வதில் அலட்சியமாக உள்ளனர், இது தேவையற்ற தாமதங்கள் மற்றும் நெரிசலுக்கு வழிவகுக்கிறது. 60 நிமிட ரீசார்ஜிங் விதியின் மூலம் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
புதிய விதி எப்படி செயல்படும்?
உங்கள் FASTag கணக்கில் போதுமான இருப்பு இல்லாத நிலையிலும் உங்களால் டோல் பிளாசாவை கடக்க முடியும். ஆனால் SMS மூலமாகவோ அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவோ இந்த அறிவிப்பு கொடுக்கப்படும். அடுத்த 60 நிமிடங்களுக்குள் ரீசார்ஜ் செய்ய தவறினால் கட்டணம் இரட்டிப்பாகும். உதாரணமாக 100 ரூபாய் டோல் கட்டணமாக இருந்தால், 200 ரூபாய் வசூல் செய்யப்படும். இதன் மூலம் ஓட்டுநர்கள் தங்கள் FASTag கணக்குகளில் தவறாமல் ரீசார்ஜ் செய்வதை ஊக்குவிக்கும். இந்த புதிய விதிமுறைகள் இந்தியாவில் சுங்கச்சாவடி செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படி என்று அமைச்சகம் குறிப்பிடுகிறது.
மேலும் படிக்க | புதிய வருமான வரி மசோதா 2025... வரிசெலுத்துவோர் அடையும் சில பயன்கள் விபரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ