சக தொகுப்பாளர் பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சர்ச்சையில் சிக்கிய மணிமேகலை தற்போது விஜய் டிவியை விட்டே வெளியேற உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சன் குழுமத்தில் சன் மியூஸிக்கில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை பிறகு விஜய் டிவியில் இணைந்தார். அங்கு பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார்.
விஜய் டிவியின் பிரபலமான சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாலியில் முதலில் கோமாளியாக இருந்தார் மணிமேகலை. பிறகு கடந்த சீசனில் தொகுப்பாளினியாக பங்கு பெற்றார்.
கடந்த சீசனில் மற்றொரு தொகுப்பாளினி பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார். இது பெரும் சர்ச்சையாக மாறியது.
மணிமேகலைக்கு பல இடங்களில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் வந்தது. இதனையடுத்து அவர் விஜய் டிவியின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்குபெறவில்லை.
இந்நிலையில் ஒரு ஆச்சரியமான திருப்பமாக மணிமேகலை இப்போது ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
டான்ஸ் ஜோடி டான்ஸின் வரவிருக்கும் சீசனில் ஆர்ஜே விஜய்யுடன் இணைந்து தொகுப்பாளராக பணியாற்றுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான புரமோ விரைவில் வர உள்ளதாக கூறப்படுகிறது.