You Should Not Borrow These Things: ‘கடன் அன்பை முறிக்கும்’ என சிலர் கூறுவதை கேள்வி பட்டிருப்போம். ஆனால், ஒரு சில பணம் அல்லாத கடன்கள் அப்படியெல்லாம் அன்பை முறிக்காது. ஆனால், அவற்றால் நமக்கு கெட்ட நேரம் வரலாம் என வாஸ்து சாஸ்திர பலன்கள் கூறுகின்றன. பணத்தை கடனாக பெறுவது என்பது, நம் வீட்டில் ஏழ்மையான நிலையை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த கடனை கூட நிதி நிலை உயர்ந்த பிறகு எப்படியாவது திரும்ப செலுத்தி விடலாம். ஆனால், நாம் சில பொருட்களை பிறரிடம் இருந்து இரவலாக பெற்றால் கண்டிப்பாக நம் வீட்டில் கஷ்டம் வரும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அவை என்னென்ன பொருட்கள் தெரியுமா?
பேனா:
பல சமயங்களில் நாம் வங்கிக்கு செல்லும்போது ஏதாவது படிவத்தை நிரப்ப வேண்டும் என்றால் பிறரிடமிருந்து பேனாவை கடன் வாங்குவோம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் உபயோகிக்கும் பேனா என்பது, அவருடைய தலையெழுத்துடன் இணைக்கப்பட்டிருக்குமாம். அதன் பின்னால் ஒரு காரணமும் இருக்குமாம். இந்த சூழலில் நாம் இன்னொருவருடைய பேனாவை கடன் வாங்கி எழுதும் போது அவர்களுடைய கெட்ட நேரத்தை கூட நமக்கு தெரியாமலே நாம் நம் மீது எழுதிக் கொள்ள முடியுமாம். இது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூனியம் என கூறப்படுகிறது.
கைகடிகாரம்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி இன்னொருவருடைய கைகடிகாரத்தை நாம் கடனாக வாங்க கூடாதாம். நீங்கள் கைக்கடிகாரத்தை கடனாக வாங்கி இருக்கும் அந்த நபர் எந்த கெட்ட நேரத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படி நீங்கள் அவரது கை கடிகாரத்தை வாங்கி போட்டுக் கொள்வது அந்த கெட்ட நேரத்தை நீங்களே எடுத்துக் கொள்வது போன்று ஆகிவிடுமாம். எனவே இதை தவிர்ப்பது நல்லது.
மோதிரம்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒருவருடைய மோதிரத்தை இன்னொருவர் வாங்கி போட கூடாதாம். இதனால் நீங்கள் யாரிடமிருந்து மோதிரத்தை கடனாக வாங்கிப் போட்டு இருக்கிறீர்களோ அந்த நபருக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால் உங்களுக்கும் அது வர நேரிடலாம். அதனால் எங்கு சென்றாலும் பிறரின் மோதிரத்தை மட்டும் வாங்கிப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
ஆடை:
வாஸ்து சாஸ்திரக் கணிப்புகளின் படி, ஒருவரது ஆடையை இன்னொருவர் வாங்கி போடக்கூடாது என்று கூட கூறப்படுகிறது. இது அந்த நபரிடம் இருக்கும் நெகடிவ் ஆற்றல்களை உங்களுக்குள்ளும் செலுத்த நேரிடலாம். எனவே பெருன்பான்மையான சமயங்களில் இதனை தவிர்ப்பது நல்லது.
காலணிகள்:
வாஸ்து சாஸ்திர கணிப்புகளின் படி இன்னொருவருடைய ஷூ அல்லது காலணிகளை நீங்கள் வாங்கி போட கூடாதாம். இது உங்கள் வீட்டிற்குள் ஏழ்மை நிலையை உருவாக்குமாம். மேலும் அந்த நபருக்கு சனி தோஷம் இருந்தால் அது உங்களையும் தாக்க நேரிடலாம். அது அந்த நபருடைய வாழ்க்கை மட்டுமல்லாது உங்கள் வாழ்க்கையும் பாதிக்கலாம். இதனால் பிறர் காலணிகளை நீங்கள் எப்போதும் அணியக்கூடாது எனும் கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | காலண்டரை ‘இந்த’ திசையில் மாட்டவே கூடாது! இல்லயென்றால் பெரிய கஷ்டம் வரும்..
மேலும் படிக்க | Vastu Shastra: இந்த 4 பொருட்களை வீட்டில் திறந்து நிலையில் வைக்க கூடாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ