ஜனவரியில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நல்ல முதலீடு இருந்தது. இதன் மூலம், பரஸ்பர நிதிய முதலீடுகள் மொத்த மதிப்பு (AUM) ரூ.67.25 லட்சம் கோடியை எட்டியது. மிட்கேப் ஃபண்ட் வகை பரஸ்பர நிதிய திட்டங்களில் ரூ.5,148 கோடி முதலீடுகள் வந்தன. அதே சமயம் ரூ.5,721 கோடி முதலீடு ஸ்மால்கேப் ஃபண்டுகளில் வந்துள்ளது. இந்த இரண்டு வகை நிதிகளிலும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது.
நிறுத்தப்பட்ட எஸ்ஐபி முதலீடுகள்
ஜனவரி மாதத்தில், புதிய எஸ்ஐபி பதிவுகளை விட பழைய எஸ்ஐபிகள் நிறுத்தப்பட்டது அதிகமானது சிறிது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஜனவரியில் எஸ்ஐபி மூலம் ரூ.26,400 கோடி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், புதிய எஸ்ஐபி பதிவுகளுடன் ஒப்பிடுகையில், 5.14 லட்சத்திற்கும் அதிகமான எஸ்ஐபிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
முதலீட்டாளர்கள் SIP முதலீடுகளை நிறுவதற்கான சில காரணங்கள்
ஜனவரி மாதத்திற்கான தரவுகள், SIP கணக்கை மூடியவர்களின் எண்ணிக்கை புதிதாக SIP முதலீடுகளை தொடங்கியவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், பெரும்பாலும் இதற்கு முக்கிய காரணம் உத்தி தொடர்பான முடிவுகள். முதலீட்டாளர்கள் சில சமயங்களில் பல சிறிய SIP முதலீடுகளை நிறுத்திவிட்டு, அவற்றின் இடத்தில் பெரிய அளவில் SIP முதலீட்டை தொடங்குவார்கள். சில சமயங்களில், முதலீட்டாளர்கள் சில SIP முதலீடுகளை நிறுத்தி வருமானத்தை அதிகரிக்க தங்கள் போர்ட்ஃபோலியோவில் மாற்றங்களைச் செய்கிறார்கள். இது தவிர சொந்த காரணங்களுக்காவும், நிதி தேவைக்காகவும் முதலீட்டை நிறுத்தலாம்.
SIP முதலீடுகள் செய்ய ஏற்ற நேரமா இது?
SIP முதலீடுகளை நிறுத்துவது என்பது முதலீட்டாளர்கள் சந்தையில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அதிக எண்ணிக்கையிலான SIP நிறுத்தப்பட்ட போதிலும், பரஸ்பர நிதிகளில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அப்படியே உள்ளது. குறிப்பாக இது பணத்தை எடுப்பதற்கான நேரம் அல்ல, ஆனால் பணத்தை முதலீடு செய்வதற்கான நேரம்.
பங்கு சந்தையுடன் ஒப்பிடுகையில் ரிஸ்க் குறைவு
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் இருந்து பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டதால், பல நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. எனினும், பங்கு சந்தையுடன் ஒப்பிடுகையில் இதில் ரிஸ்க் குறைவு என்பதால், முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான எளிதான வழி
SIP என்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான எளிதான வழியாகும். இதில், முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்கிறார். இது சில்லறை முதலீட்டாளருக்கு சிறிய தொகையை முதலீடு செய்யும் வசதியை அளிப்பதால், அதிகமானோர் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். SIP முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு பெரும் செல்வத்தை உருவாக்க வாய்ப்பளிக்கிறது.
மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.10,000 முதலீட்டில் கோடீஸ்வரராகலாம்... எளிய கணக்கீடு இதோ
தற்போதைய சந்தை நிலையில் SIP தொடங்குவதன் நன்மைகள்
நீங்கள் இப்போது SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளின் ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்தால், அதிக யூனிட்கள் ஒதுக்கப்படும். பங்கு விலைகள் வீழ்ச்சியால், NAV அதாவது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் நிகர சொத்து மதிப்பும் சரிந்துள்ளது. இதன் பொருள் ஒவ்வொரு மாதமும் உங்கள் முதலீட்டில் அதிக யூனிட்கள் ஒதுக்கப்படும். இது நீண்ட காலத்திற்கு உங்கள் வருமானத்தை கணிசமாக அதிகரிக்கும். எனவே, நீங்கள் உங்கள் SIP மூடாமல் புதிய SIP முதலீடுகளை தொடங்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ