Salaar Movie Is Getting Trending Award : ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிரடி திரைப்படமான ' சலார் சீஸ்ஃபயர் - பார்ட் 1' ஜியோ ஹாட்ஸ்டாரில் (இதற்கு முன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்) 366 நாட்களுக்கும் மேலாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் உலகளவில் பார்வையாளர்களை கவர்ந்த சக்தி வாய்ந்த கதையில் நடித்திருந்தனர்.
இதில் உள்ள அதிரடியான சண்டை காட்சிகள் முதல் அதன் தீவிரமான கதை சொல்லும் பாணி வரை ' சலார் சீஸ்ஃபயர் பார்ட் 1' பார்த்தவுடன் திரைப்பட காட்சிகளை மறு வரையறை செய்து, வெளியான ஒரு வருடத்திற்கு பிறகும் கூட டிஜிட்டல் தளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. நம்ப முடியாத இந்த நீடித்த வெற்றி- மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்திற்கும், அவர்களுடைய அசைக்க முடியாத ஆதரவிற்கும் சிறந்த சான்றாகும். இந்த தருணத்தில் அசாதாரணமான இந்த பயணத்தில் பங்கேற்ற 366 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு பிரத்யேக பரிசுகளை அனுப்பி ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அதன் அர்ப்பணிப்பு உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. 'சலார் சீஸ்ஃபயர் பார்ட் 1' திரைப்படத்தின் மீதான அவர்களின் ஆர்வமும், அன்பும் இந்த திரைப்படத்தை கலாச்சார நிகழ்வாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இது தொடர்பாக 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் பேசுகையில், '' சலார் மீதான ரசிகர்களின் காதலால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஜியோ ஹாட்ஸ்டாரில் 'சலார் 1' படத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள். விரைவில் கான்சாரில் கால் பதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மேலும் இது தொடக்கம் தான். 'சலார் 2' படத்திற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். அங்கு புராணக்கதை தொடர்கிறது. அதிரடி மேலும் தீவிரமடைகிறது. கதை இன்னும் மிகப்பெரிய உயரத்தை தொட்டிருக்கிறது. அடுத்த அத்தியாயம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல எல்லைகளை கடந்து செல்லும் ஒரு மின்னல் போன்ற சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது. '' என்றார்.
மேலும் படிக்க | சலார் 2 முதல் கல்கி 2 வரை! 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் பிரபாஸ் படங்கள்!
மேலும் படிக்க | Salaar Review: சலார் முதல் விமர்சனம்.. பாக்ஸ் ஆபிஸில் கெத்தா? எப்படி இருக்கு படம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ