IPL 2025 Schedule Live Updates: அனைவரும் அதிகம் எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. முதல் போட்டி மார்ச் 22ம் தேதியும், பைனல் மே 25ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகிறது. ஐபிஎல் 2025 பிளேஆஃப்கள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த முறை இந்தியாவில் உள்ள 13 மைதானங்களில் மொத்தமாக 74 ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மார்ச் 22ம் தேதி ஐபிஎல் தொடங்கினாலும், அனைவரும் மார்ச் 23ம் தேதிக்காக காத்துக்கொண்டுள்ளனர். காரணம் அன்று இரவு சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
அதற்கு முன்பு மாலையில் கடந்த ஆண்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகிறது. 10 அணிகளின் ஹோம் மைதானங்களை தவிர இந்த முறை விசாகப்பட்டினம், கவுகாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 3 இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இந்த மைதானங்களில் விளையாடும். சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே இரண்டு போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
IPL 2025 SCHEDULE FOR KNOCK-OUTS
May 20 - Qualifier 1
May 21 - Eliminator
May 23 - Qualifier 2
May 25 - FinalQualifier 1 & Eliminator at Hyderabad and Qualifier 2 & Final at Kolkata. pic.twitter.com/82c0DiKot3
— Johns. (@CricCrazyJohns) February 16, 2025
News
BCCI announces schedule for TATA IPL 2025
Details
— IndianPremierLeague (@IPL) February 16, 2025
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ