BSNL Vs Reliance Jio Vs Airtel: சுமார் ரூ.1000 ரீசார்ஜ் திட்டத்தில் அதிக நன்மைகள் கொடுப்பது எது?

BSNL Vs Reliance Jio Vs Airtel: கட்டணம் மற்றும் வேலிடிட்டி அடிப்படையில் BSNL திட்டத்துடன் ஒப்பிடும் போது, Airtel மற்றும் Jio கட்டணங்கள் பல அதிகமாவே உள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 15, 2025, 03:04 PM IST
  • பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தின் வேலிடிட்டி.
  • பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தில் எத்தனை GB டேட்டா கிடைக்கும்?
  • ஜியோ ரூ.999 திட்ட விவரங்கள்.
BSNL Vs Reliance Jio Vs Airtel: சுமார் ரூ.1000 ரீசார்ஜ் திட்டத்தில் அதிக நன்மைகள் கொடுப்பது எது? title=

BSNL Vs Reliance Jio Vs Airtel: கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியதால், பிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் பயனடைந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அரசின் தொலைத்தொடர்பு நிறுவனம் லாபகரமான நிறுவனமாக உருவெடுத்துள்ளது, இதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள் இன்னும் ஜியோ மற்றும் ஏர்டெல்லை விட மிகவும் குறைவானதாக இருப்பது. 

கட்டணம் மற்றும் வேலிடிட்டி அடிப்படையில் BSNL திட்டத்துடன் ஒப்பிடும் போது, Airtel மற்றும் Jio கட்டணங்கள் பல அதிகமாவே உள்ளன. அந்த வகையில், பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தில் எத்தனை GB டேட்டா கிடைக்கும், மேலும் இந்த திட்டம் மூலம் கூடுதல் பலன்கள் உள்ளதா?, இதற்கு இணையான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களில் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் 997 திட்டம் கிடைக்கும் நன்மைகள்

ரூ.997 இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. டேட்டா வரம்பை அடைந்த பிறகு, வேகம் 40kbps ஆக குறையும்.

பிஎஸ்என்எல் 997 திட்டத்தின் வேலிடிட்டி

ரூ.997 திட்டத்தில், பயனர்களுக்கு 160 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டம் டேட்டா, அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் தவிர, வேறு கூடுதல் பலன்களை வழங்காது.

ஜியோ 999 திட்ட விவரங்கள்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது பிஎஸ்என்எல்லின் ரூ.997 திட்டத்தை விட கட்டணம் ரூ.2 அதிகம். ஜியோ ரூ 999 திட்டத்தில், தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, இலவச அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஆனால் இதில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், இந்த திட்டம் BSNL போன்று 160 நாட்களுக்கான திட்டம் அல்ல, 98 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், இந்த திட்டத்தில், ஜியோ கிளவுட், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா ஆகியவற்றுக்கான இலவச அணுகல் கிடைக்கிறது.

மேலும் படிக்க | Jio உடன் இணைந்த Disney + Hotstar... குறைந்த கட்டணத்தில் JioHotstar OTT தளம் அறிமுகம்

ஏர்டெல் 979 திட்ட விவரங்கள்

ஏர்டெல்லுக்கு ரூ.997 திட்டம் இல்லை, ஆனால் ரூ.979 திட்டம் உள்ளது. இது பிஎஸ்என்எல் திட்டத்தை விட 18 ரூபாய் மலிவானது. இந்த திட்டத்தில், ப்ரீபெய்டு பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, இலவச அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

ஜியோ 999 திட்டம் Vs ஏர்டெல் 979 திட்டம்

பிஎஸ்என்எல் ஒருபுறம் இருக்க, இந்த திட்டம் ஜியோவை விட குறைவான வேலிடிட்டியை வழங்குகிறது, இந்த ஏர்டெல் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் அப்பல்லோவின் மூன்று மாத உறுப்பினர், வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் 22க்கும் மேற்பட்ட OTTகளின் பலனை வழங்குகிறது.

மேலும் படிக்க | இனி ஸ்பேம் கால்கள் தொல்லை இருக்காது... விதிகளை கடுமையாக்கிய TRAI

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News