Anti Valentines Week 2025 When Is Break Up Day : 2 நாட்களுக்கு முன்புதான், காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் பலர், தங்கள் காதலை பரிமாறிக்கொண்டும், முதன்முறையாக காதலை தெரிவித்தும் விதவிதமாக கொண்டாடினர். இந்த நிலையில், இதற்கு அடுத்த வாரத்திலேயே பிரேக்-அப் தினமும் கொண்டாடப்பட இருக்கிறது. அதன் தேதி என்ன? அது ஏன் கொண்டாடப்படுகிறது? இது குறித்த முழு தகவலை நாம் இங்கு பார்ப்போம்.
காதலர் தினம்:
அனைத்து வருடமும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பலர் தங்களின் அன்புக்குரியவர்களிடம் காதலை தெரிவித்து அன்பை பகிர்வது இயல்பு. ஆனால். காதலர்களுக்கு என்று ஒரு தினம் இருக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்கும் ஒரு தினம் வேண்டும் அல்லவா? அந்த தினம் குறித்து இங்கு பார்க்கலாம்.
காதலர் எதிர்ப்பு வாரம்:
காதலர் தின கொண்டாட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ரோஸ் டே, டெடி டே, ஹக் டே, கிஸ் டே என பல தினங்கள் கொண்டாடப்பட்டது. இந்த வாரம் காதலர் எதிர்ப்பு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனால் இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளையும் ஸ்லாப் டே, கிக் டே, பிரேக் அப் டே என ஒவ்வொரு பெயர் வைத்து கடைபிடிக்கின்றனர். இவை குறித்த முழுவிவரம் இங்கே.
கிக் டே:
ஆங்கிலத்தில் Kick என்றால் ஒருவரை எட்டி உதைப்பது என்று அர்த்தம். அந்த வகையில் நம்மிடம் ஒருவரிடம் இருந்து இருக்கும் கெட்ட நினைவுகளை எட்டி உதைத்து வெளியில் தள்ளும் வகையில் இந்த தினம் பிப்., 16ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. பழைய நினைவுகளில் இருந்து கடந்து வந்து நம் ex-ஐ மறக்கும் வழிகளை பேணுவதற்கு இந்த தினம் உதவுகிறது. மனதில் இருக்கும் நெகட்டிவிட்டியை வெளியே தள்ளி உணர்ச்சி ரீதியாக நம்மை நாம் பார்த்துக் கொள்ள இந்த தினம் உதவுவதாக கூறப்படுகிறது.
பர்ஃப்யூம் டே:
பிப்ரவரி 17 ஆம் தேதி இந்த பெர்ஃப்யூம் டே கடைபிடிக்கப்படுகிறது. சிங்கிளாக இருப்பவர்கள் தங்களுக்கு தாங்களே நல்ல பர்பியூமை வாங்கிக்கொண்டு வாழ்க்கையை பிரஷ்ஷாக தொடங்க வேண்டும் என்பதற்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறதாம். அதேபோல தங்களுக்கு பிடித்துவத்தை செய்து தங்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளவும் இந்த தினம் உதவுவதாக சில சிங்கிள்ஸ் கூறுகின்றனர்.
Flirt டே:
ஆங்கிலத்தில் Flirt என்றால் தமிழில் அதை ஒருவரிடம் வழிவது என்று கூறலாம். இந்த தினம் பிப்ரவரி 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பழைய காதலரை மறந்து விட்டு, புதிதாக தங்களுக்கு பிடித்த ஒரு நபருடன் அவர்கள் காதல் குறித்து பேசலாம். இது ஒரு வகையில் காதல் வாழ்க்கையில் முன்னேறி செல்ல, சிங்கிள்ஸ்களுக்கு உதவும்.
உண்மையை தெரிவிக்கும் தினம்:
இந்த தினத்தை ஆங்கிலத்தில் confession day என்று கூறுகின்றனர். இதனை பிப்ரவரி 19ஆம் தேதி கடைபிடிக்கின்றனர். இந்த நாளில் உங்கள் மனதில் உள்ள விஷயங்களை எந்த ஒலிவு மறைவும் இன்றி உங்களுக்கு பிடித்தவரிடம் தெரிவிக்கலாம். இது பழைய தவறுகளுக்காக நீங்கள் தெரிவிக்கும் மன்னிப்பாக இருந்தாலும் சரி, எந்த உணர்ச்சிகளை மனதில் அடக்கி வைத்திருந்தாலும் அதை உங்கள் கிரஷிடம் தெரிவிப்பதாக இருந்தாலும் சரி. அதற்கு இந்த தினத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் ஒரு தனி மனிதராக வளரும் போது உங்களுக்கு என்ன மாதிரியான தேவைகள் இருக்கிறது என்பதை உங்களிடம் நீங்களே உண்மையாக தெரிவிப்பதற்கு கூட இந்த தினம் உதவும்.
மிஸ்ஸிங் டே:
இந்த தினத்தை பிப்ரவரி 20ஆம் தேதி கொண்டாடுகின்றனர். தங்களின் பழைய ரிலேஷன்ஷிப் அல்லது பிரண்ட்ஷிப் குறித்து யோசிப்பது பழைய நினைவுகளை இப்போது ஆசை போட்டு பார்ப்பது போன்ற விஷயங்களை இந்த நாளில் செய்கின்றனர். அப்போது நாள் அந்த மாதிரி இருந்திருக்கலாம், ஆனால் இன்றைய நிலையில் இப்படி தான் நாம் இருக்கிறோம் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்ற ஒரு புரிதலை இந்த நாள் நமக்கு உருவாக்கி கொடுக்கும்.
பிரேக் அப் டே:
இந்தக் காதலர் எதிர்ப்பு வாரத்தில் கடைசி நாளாக கொண்டாடப்படுவது இந்த தினம் தான். இதனை பிப்ரவரி 21ஆம் தேதி அன்று பலரும் கடைபிடிக்கின்றனர். ஆரோக்கியமற்ற சில டாக்ஸிக்கான உறவுகளில் இருப்பவர்கள், தங்களை குழப்பமாகவே வைத்துக் கொள்ளும் ஒரு நபரிடம் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் இந்த நாளில் அந்த உறவை முறித்துக் கொள்ளலாம். இதனால் நெகட்டிவிட்டியை நம் வாழ்வில் இருந்து தள்ளி வைப்பதோடு, நமக்கு என்ன தேவையோ அதை தெளிவாக பார்க்க இந்த நாள் உதவும். ஒரு விஷயத்தை முடிவும் தொடக்கம்தான், என்பதை இந்த நாள் நமக்கு உணர்த்துகிறது.
மேலும் படிக்க | காதலர் தினம் 2025: எந்த கலர் ட்ரஸ் போட்டால், என்ன அர்த்தம்?
மேலும் படிக்க | காதலர் தினம் 2025: தியேட்டரில் ரீ-ரிலீஸ் ஆன படங்கள்! எல்லாமே நல்ல படமாச்சே...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ