8வது ஊதியக்குழு, UPS: அடேங்கப்பா..... ஊதியம், ஓய்வூதியத்தில் 186% உயர்வு, முழுமையான கணக்கீடு இதோ

8th Pay Commission: 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இதற்கான கணக்கீடு என்ன? அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

8th Pay Commission: 8வது சம்பளக் குழு அமலுக்கு வந்தவுடன் UPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும்? இதை பற்றி இங்கே காணலாம். 8வது சம்பளக் கமிஷனில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் காரணி 1.92 முதல் 2.86 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இதன் அடிப்படையில் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தற்போதைய ரூ.9,000 -இலிருந்து ரூ.17,280 முதல் ரூ.25,740 -க்கு இடையில் அதிகரிக்கக்கூடும்.

1 /11

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) சென்ற வாரம் மிகப்பெரிய நல்ல செ3ய்தி கிடைத்தது. 8வது உதியக்குழுவின் உருவாக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நீண்ட நாட்களாக 8வது ஊதியக் குழுவிற்கான கோரிக்கை இருந்து வந்த நிலையில், தற்போது அரசாங்கம் இது குறித்த தனது தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2 /11

8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? இதற்கான கணக்கீடு என்ன? அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /11

அரசின் இந்த அறிவிப்பு, மத்திய அரசுப் பணியில் பணிபுரியும் அல்லது பணிக்குப் பிறகு ஓய்வு பெற்ற லட்சக்கணக்கான குடும்பங்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. மோடி அரசின் இந்த முடிவால் 1.2 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த முடிவிற்குப் பிறகு, அடுத்தது, ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் அதிகமாகியுள்ளது.

4 /11

ஜனவரி 16, 2025 அன்று, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 8வது ஊதியக் குழுவை அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். அதுவரை, ஊழியர்கள் 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, அகவிலை நிவாரணம், பிற கொடுப்பனவுகள் ஆகியவை அளிக்கப்படும்.

5 /11

பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் புதிய ஓய்வூதிய அமைப்பு (NPS) இரண்டின் சிறப்பு அம்சங்களையும் இணைத்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) உருவாக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ் கீழ், மத்திய ஊழியர்கள் நிலையான ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இது ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

6 /11

இந்தத் திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம், உத்தரவாதமான ஓய்வூதியத் தொகை மற்றும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யுபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பணியாளருக்கு ஓய்வு பெற்ற பிறகு வாழ்நாள் முழுவதும் 12 மாத சராசரி அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். ஊழியர் மத்திய அரசு பணிகளில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

7 /11

ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றியிருந்தால், அவரது குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.10,000 ஆக இருக்கும். ஊழியர் இறந்த பிறகு, பணியாளரின் ஓய்வூதியத்தில் 60 சதவீதம் அவரது குடும்பத்தில் தகுதியான உறுப்பினர்களில் ஒருவருக்கு வழங்கப்படும்.  

8 /11

8வது சம்பளக் குழு அமலுக்கு வந்தவுடன் UPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும்? இதை பற்றி இங்கே காணலாம். 8வது சம்பளக் கமிஷனில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் காரணி 1.92 முதல் 2.86 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இதன் அடிப்படையில் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தற்போதைய ரூ.9,000 -இலிருந்து ரூ.17,280 முதல் ரூ.25,740 -க்கு இடையில் அதிகரிக்கக்கூடும்.

9 /11

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு பெருக்கி ஆகும். 8வது உதியக்குழுவில் 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், ஓய்வூதியம் மற்றும் சம்பளத்தில் சுமார் 186% அதிகரிப்பைக் காணலாம்.

10 /11

சம்பள உயர்வு: UPS-ன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் என்னவாக இருக்கும்? 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பயன்படுத்தினால், தற்போது ரூ.18,000 ஆக இருக்கும் அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.51,480 ஆக அதிகரிக்கும். இதேபோல், 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில், குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போதைய ரூ.9,000 இலிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்கும்.

11 /11

இந்த ஓய்வூதியத் தொகை 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்வது நல்லது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாறினால், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இரண்டும் மாறும்.