சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட ஹர்திக் பாண்டியாவிற்கு தடை! காரணம் இது தான்!

CSK vs MI: ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 /6

அனைவரும் அதிக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ஐபிஎல் 2025க்கான அட்டவணையை பிசிசிஐ பிப்ரவரி 16ம் தேதி மாலை வெளியிட்டது.

2 /6

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடுகின்றன.

3 /6

2வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணியும், மூன்றாவது போட்டியில் எம்ஐ மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் சென்னையில் நடைபெறுகிறது.

4 /6

இந்நிலையில் ஐபிஎல் 2025ல் மார்ச் 23ம் தேதி நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாது.

5 /6

ஐபிஎல் 2024ல் மும்பை அணி தனது கடைசி போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிராக மெதுவான ஓவர் வீசியதால் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.  

6 /6

ஏற்கனவே 2 முறை அபராதம் விதிக்கப்பட்டதால் மூன்றாவது முறை ரூ. 30 லட்சம் அபராதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணிக்கு எதிராக ஹர்திக் விளையட மாட்டார்.