சமுத்திரகனியின் திரு.மாணிக்கம் படம் ஓடிடியில் வெளியீடு! எந்த தளத்தில் பார்க்கலாம்?

Thiru Manickam OTT Release : நந்தா பெரியசாமி இயக்கத்தில், இந்த உணர்ச்சிகரமான ஃபேமிலி டிராமா  திரைப்படத்தில், சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jan 21, 2025, 06:30 PM IST
  • சமுத்திரக்கனி நடித்த திரு.மாணிக்கம் திரைப்படம்
  • ஓடிடியில் வெளியாகிறது..
  • எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?
சமுத்திரகனியின் திரு.மாணிக்கம் படம் ஓடிடியில் வெளியீடு! எந்த தளத்தில் பார்க்கலாம்? title=

Thiru Manickam OTT Release : திரு மாணிக்கம் திரைப்படம், தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் அலையை உருவாக்கியது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். 

திரு மாணிக்கம் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்: 

திரு மாணிக்கம் படம் குறித்து  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறிப்பிடுகையில், “இது மிக அற்புதமான படைப்பு, இப்படத்தின் ஆழமும், உணர்வுகளும் படம் முடிந்த பின்னும் நம்மை விட்டு அகலவில்லை. இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு தமிழ்த்திரையுலகில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. சமுத்திரக்கனி, பாரதிராஜா உட்பட அனைவரும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர், படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார். மேலும் ஆர்யா முதல் ஐஏஎஸ் இறையன்பு வரை, பல முன்னணி ஆளுமைகள் பலரும், இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

படக்குழு பேசியது..

திரு.மாணிக்கம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து நடிகர் சமுத்திரகனி பேசுகையில், “திரு மாணிக்கம் படத்தின் கதை, லாட்டரி கடை உரிமையாளரான மாணிக்கத்தை (சமுத்திரக்கனி) பற்றியது. மாணிக்கம் பரிசு விழுந்த 1.5 கோடி மதிப்புள்ள  டிக்கெட்டை, உரியவரிடம்  திருப்பித் தர, அவரைத் தேடிப் புறப்படுகிறார். நேர்மைக்கும்   செல்வத்தின் மீதுள்ள மோகத்திற்கும்  இடையில் சிக்கித் தவிக்கிறார். நேர்மைமிக்க அவரது உன்னதமான செயல் தொடர்ச்சியான சவால்களைச் சந்திக்கிறது. இது அவரது குடும்பத்தில் சிக்கல்களையும் மற்றும் மாறிப்போன சமூகத்தின்  அழுக்கையும்   அம்பலப்படுத்துகிறது.  மாணிக்கம் தனது நேர்மையைக் காப்பாற்ற,  குடும்பத்தையும், சமூகத்தையும் எப்படிச் சமாளிக்கிறார் அதில் எப்படி ஜெயிக்கிறார் என்பது தான் இந்தப்படம்” என்று கூறியிருக்கிறார்.

இயக்குநர் நந்தா பெரியசாமி பேசுகையில், “திரு மாணிக்கம் ஒரு நம்பமுடியாத பயணம், இப்போது ZEE5 இல் திரையிடப்படுவதைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். திரையரங்குகளில் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த இப்படம், இப்போது ஓடிடி மூலம் அனைவரையும் மகிழ்விக்கவுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவகுமார், ஆர்யா, ஐஏஎஸ் இறையன்பு, இயக்குநர் அமீர், நித்திலன் சுவாமிநாதன், தமிழரசன் பச்சமுத்து, கார்த்திக் சுப்பராஜ் போன்ற திரைத்துறை ஜாம்பவான்கள் தந்த அங்கீகாரத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களின் வார்த்தைகள், எனக்கும் ஒட்டுமொத்த குழுவிற்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது” என்று கூறினார்.

ஓடிடியில் வெளியீடு:

திரு.மாணிக்கம் திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை, வரும் ஜனவரி 24ஆம் தேதி முதல் மேற்கூறிய தளத்தில் காணலாம்.

மேலும் படிக்க | 2025இல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரீலிஸ் ஆகும் தமிழ் படங்கள்... முழு லிஸ்ட் இதோ

மேலும் படிக்க | இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்! எல்லாமே புதுசு..எதை, எந்த தளத்தில் பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News