8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியம் எவ்வளவு உயரும் தெரியுமா? சிலர் மாதம் ரூ.3.5 லட்சம் வரை பெறுவார்கள்

8th Pay Commission: ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தில் கணிசமான உயர்வை பெறலாம். புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு சில ஓய்வூதியதாரர்கள் மாதத்திற்கு ரூ.3.5 லட்சம் வரை ஓய்வூதியம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

8th Pay Commission: 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் மாற்றம் ஏற்படும். அகவிலைப்படி அதிகரிப்பு எப்படி இருக்கும்? அகவிலைப்படி தற்போதுள்ள அளவைத் தாண்டி தொடர்ந்து அதிகரிக்குமா? அல்லது அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்படுமா? புதிய ஊதியக்குழு சம்பளக் குழு அறிமுகப்படுத்தப்படும்போது, ​​பழைய அகவிலைப்படி புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படும். இதன் விளைவாக, அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்படலாம்.

1 /12

மத்திய அரசு சமீபத்தில் 8வது ஊதியக் குழுவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜனவரி 1, 2026 முதல் அதன் பலன்களைப் பெறத் தொடங்குவார்கள். 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.

2 /12

ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தில் கணிசமான உயர்வை பெறலாம். புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு சில ஓய்வூதியதாரர்கள் மாதத்திற்கு ரூ.3.5 லட்சம் வரை ஓய்வூதியம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 8வது ஊதியக் குழுவால் 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

3 /12

7வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.9,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,25,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. 

4 /12

இருப்பினும், 8வது ஊதியக் குழுவின் கீழ், ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.86 ஆக அதிகரிப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இது நடந்தால், குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.25,740 ஆக உயரும். இது 186% அதிகரிப்பைக் குறிக்கும். இதன் விளைவாக, உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான அதிகபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.3,57,500 ஐ எட்டக்கூடும்.  

5 /12

பணவீக்கத்தை எதிர்கொள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதார்ரர்களுக்கு அகவிலை நிவாரணம் (Dearness Allowance) ஆகியவை வழங்கப்படுகின்றன. தற்போது, ​​இது அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 53% ஆக உள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) அடிப்படையில் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி திருத்தப்படுகின்றது.

6 /12

தற்போதுள்ள அகவிலை நிவாரண அளவின் படி, ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.10,000 என்றால், 53% அகவிலைப்படியைச் சேர்த்த பிறகு, மொத்த அகவிலை நிவாரணம் ரூ.15,300 ஆக மாறும்.

7 /12

சம்பள உயர்வு: 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் மாற்றம் ஏற்படும். அகவிலைப்படி அதிகரிப்பு எப்படி இருக்கும்? அகவிலைப்படி தற்போதுள்ள அளவைத் தாண்டி தொடர்ந்து அதிகரிக்குமா? அல்லது அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்படுமா? புதிய ஊதியக்குழு சம்பளக் குழு அறிமுகப்படுத்தப்படும்போது, ​​பழைய அகவிலைப்படி புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படும். இதன் விளைவாக, அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்படலாம்.

8 /12

8வது சம்பளக் குழு ஜனவரி 1, 2026 அன்று செயல்படுத்தப்படும். அதாவது அதற்கு முன்னர் ஜனவரி 2025 மற்றும் ஜூலை 2025 இல் 2 முறை திருத்தப்படும். வழக்கமாக ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் அகவிலைப்படி சுமார் 3% அதிகரிக்கும். அப்படி பார்த்தால், 8வது சம்பளக் குழு செயல்படுத்தப்படுவதற்கு முன்பு அது குறைந்தது 59% ஆக உயரும்.

9 /12

இருப்பினும், இதை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், ஜனவரி 1, 2026 க்கு அரசாங்கம் கூடுதலாக 3% DA உயர்வை அறிவிக்கலாம். அப்படியானால், அகவிலைப்படி 62% ஆக உயரும். 8வது சம்பளக் குழு இறுதியாக செயல்படுத்தப்படும்போது, அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடனும் அகவிலை நிவாரணம் ஓய்வூதியத்துடநும் இணைக்கப்படும்.

10 /12

அதன் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும். அதன் பிறகு 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அகவிலைப்படி வழக்கத்தை போல, வருடத்திற்கு இரண்டு முறை திருத்தப்படும்.

11 /12

8வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.28 முதல் 2.86 -க்குள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.41,040 முதல் ரூ.51,480 வரை அதிகரிக்கக்கூடும். ரூ.2,50,000 அடிப்படை ஊதியத்திற்கு எதிர்பார்க்கப்படும் திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ரூ.6,42,500 ஆக இருக்கும்.

12 /12

பொறுப்பு துறப்பு: மேலே உள்ள கணக்கீடுகள் ஊடக அறிக்கைகளின் அடிப்படையிலான கணிப்புகள்தான். சரியான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் சம்பள திருத்தங்கள் அரசாங்கத்தின் இறுதி முடிவைப் பொறுத்தது. எப்படியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்ரர்கள் கணிசமான ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வை எதிர்பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை.