ஆண்மை பிரச்சனை முதல் மூளை ஆற்றல் வரை... வியக்க வைக்கும் அஸ்வகந்தா என்னும் மூலிகை

அஸ்வகந்தா என்னும் மூலிகையில் உள்ள மருத்துவ குணங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல வகையில் உதவுகிறது. இந்நிலையில், அஸ்வகந்தா என்னும் அற்புத மூலிகையின் மருத்துவ பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 27, 2025, 12:03 PM IST
  • அஸ்வகந்தா என்னும் அற்புத மூலிகையின் மருத்துவ பலன்கள்.
  • ஆரோக்கியத்தை பராமரிக்க, ​​​​ஆயுர்வேத வைத்தியம் சிறந்தது.
  • அஸ்வகந்தா மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து.
ஆண்மை பிரச்சனை முதல் மூளை ஆற்றல் வரை... வியக்க வைக்கும் அஸ்வகந்தா என்னும் மூலிகை title=

பழங்காலத்திலிருந்தே மூலிகைகள் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மூலிகைகள் தீவிரமான நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில், அஸ்வகந்தா என்னும் மூலிகையில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடலின் உள் உறுப்புக்கள் பலவற்றை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகின்றது. 

ஆரோக்கியத்தை பராமரிக்க, ​​​​ஆயுர்வேத வைத்தியம் சிறந்தது. இயற்கை நமக்கு பல மூலிகைகளை கொடுத்துள்ளது. அதில் ஒன்றான அஸ்வகந்தா, ஆண்மை பிரச்சனை முதல், மூளை தொடர்பான பிரச்சனைகள் வரை பல நோய்களுக்கு அருமருந்தாகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற மருத்துவ குணங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. 

இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ், அஸ்வகந்தா மூலம் நாம் என்ன வகையான நன்மைகளைப் பெறலாம் என்று கூறினார். இந்நிலையில், அஸ்வகந்தா என்னும் அற்புத மூலிகையின் மருத்துவ பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அஸ்வகந்தாவின் பலன்கள்

மன அழுத்தத்தை போக்க உதவும் அஸ்வகந்தா

அஸ்வகந்தா மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து என்று அறியப்படுகிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் இன்றைய நவீன வாக்கை முறையின் அங்கமாக ஆகி விட்ட நிலையில், இதற்கு நவீன சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்க பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகளுக்கு பதிலாக இயற்கையான மாற்றுகளைத் தேடுவதால் மூலிகை மருந்துகள் பிரபலமடைந்து வருகின்றன. அஸ்வகந்தா சப்ளிமெண்ட்ஸ் உடலின் பதற்றத்தை இயல்பாக்க உதவுகிறது.

மேலும் படிக்க | பப்பாளி இலை ஜூஸ் மட்டும் குடித்தால் மூன்றே நாட்களில் 20 வயது குறைந்துவிடும்?

அஸ்வகந்தாவில் நம் மனதில் அமைதிபடுத்தி உணர்வுகளை கட்டுப்படுத்தும் கலவைகள் உள்ளன. இவை நல்ல இரவு தூக்கத்தைப் பெறவும் உதவும். அஸ்வகந்தா மன அழுத்தத்தைக் குறைப்பதைத் தவிர, பல நன்மைகளையும் கொண்டுள்ளது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக ஏற்படும் இரைப்பை புண்களை குறைக்க அஸ்வகந்தா உதவியாக இருப்பதாக பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களின்  பாலியல் ஆரோக்கியம் மேம்படும்

அஸ்வகந்தா, மன பதட்டத்தைத் தணிக்கும் திறன் காரணமாக, இயற்கையாகவே பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உதவியாக இருக்கும். விந்தணு எண்ணிக்கையையும் தரத்தினையும் அதிகரித்து ஆற்றலை அளிக்கிறது. பாலியல் பலவீனத்திற்கு மன அழுத்தம் மிக முக்கிய காரணமாகும், மேலும் நாள்பட்ட மன அழுத்தம் நம் உடலில் அழிவை ஏற்படுத்தும். குறிப்பாக, ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைக்கும் போது. அஸ்வகந்தாவை உட்கொள்வது ஆண்களின் ஆண்மைத் தன்மை, வலிமை அதிகரிக்கிறது.

அறிவாற்றலை அதிகரிக்கும் அஸ்வகந்தா

அஸ்வகந்தா நரம்பு செல்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலமும்  ஞாபக சக்தியைஅதிகரிக்கிறது.  அஸ்வகந்தா உங்கள் கவனத்தையும் செறிவையும் மேம்படுத்தும். இது தவிர, எதிர்வினை நேரம் மன கணித திறன்களை மேம்படுத்துகிறது. அல்சைமர் போன்ற நோய்களால் ஏற்படும் பாதிப்புகளையும் அஸ்வகந்தா சப்ளிமெண்ட்ஸ் தடுக்கும். மூளையில் செரோடோனின் அளவை அதிகரித்து மனநிலையை மேம்படுத்தி மூளையின் ஆற்றலை அஸ்வகந்தா மூலிகை அதிகரிக்கிறது.

உடல் வலிமை மற்றும் ஆற்றலை கொடுக்கும் அஸ்வகந்தா

அஸ்வகந்தாவை உட்கொள்வது உடல் வலிமையையும் ஆற்றலையும் அதிகரிக்கிறது. இது  விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த மூலிகையின் உதவியுடன் விளையாட்டு வீரரின் ஒட்டுமொத்த தசை மற்றும் தசை சக்தி அதிகரிக்கிறது என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

கீல்வாதத்தில் இருந்து நிவாரணம்

மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஸ்வகந்தா நிவாரணம் அளிக்கலாம். ஒரு ஆய்வில், கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு அஸ்வகந்தா மற்றும் மூன்று கூடுதல் மருந்துகளின் கலவை வழங்கப்பட்டது. மூன்று மாத காலத்திற்குப் பிறகு, ஆய்வில் பங்கேற்பாளர்கள் தங்கள் மூட்டுகள் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டனர்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | இந்த 2 பொருட்களை மஞ்சள் நீரில் கலந்து குடித்தால் கொழுப்பு எல்லாம் கரைந்துவிடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News