மத்திய பட்ஜெட் 2025: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார்.   

Written by - R Balaji | Last Updated : Feb 1, 2025, 12:15 PM IST
  • மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 8 பட்ஜெட் இது
  • பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் இங்கே
மத்திய பட்ஜெட் 2025: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? title=

Union Budget 2025-26: பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்திய இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இது அவர தாக்கல் செய்துள்ள 8வது பட்ஜெட் ஆகும்.  

சரியாக 11.02க்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடங்கினார். சில நிமிடங்கள் தொடர்ந்து கூச்சலிட்ட எதிர்க்கட்சியினர் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தி வருகிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதுவரை வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் சிறப்பம்சங்கள்:

  • உலக அளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அரசு மேற்கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. விவசாய வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. 
  • வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். 
  • 7.7 கோடி விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு மூலம் பயன்பெற உள்ளனர். 
  • சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உற்சவரம்பு 10 கோடியாக உயர்த்தப்படுகிறது. 
  • ஏற்றுமதியில் சிறு குறு நடுத்தர தொழில் துறை 45 சதவீதம் பங்கு வகிக்கிறது. 
  • அசாமில் யூரியா தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
  • சிறு தொழில் துறையினருக்கு 5 லட்சம் நிதி உதவியுடன் கூடிய கிரெடிட் கார்டு வழங்கப்படும். 
  • கிராமப்புறங்களில் இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் பயன்பெறும் வகையில் புதிய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • புதிதாக தொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்க 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு. 
  • பட்டியல் இன பெண்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இரண்டு கோடி கடன் உதவி வழங்கப்படும். ஐந்து லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் மூலம் பயன்பெறுவார்கள்.
  • தோல் மற்றும் காலணி தயாரிப்பில் 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். 
  • ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் உரம் உற்பத்தி செய்ய இலக்கு. 
  • தோல் மற்றும் காலணி தயாரிப்பில் 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். 
  • 500 கோடி மதிப்பில் கல்விக்கு AI குறித்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும்.
  • நாடு முழுவதும் 23 ஐஐடிகள் மேம்படுத்தப்படும்.  
  • அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

இவ்வாறாக மத்திய நிதி அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  

மேலும் படிங்க: மத்திய பட்ஜெட் 2025: கல்வித்துறையில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய சிறப்பம்சங்கள்!

மேலும் படிங்க: 8வது ஊதியக்குழு: 108% ஊதிய உயர்வு, 60% அகவிலைப்படி... அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News