உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு என்பது பல உடல் நல பிரச்சனைகளுக்கு காரணமாவதுடன், தொப்பை கொழுப்பு என்பது தோற்றத்தையும் கெடுக்கிறது. உடல் எடையை குறைப்பது ஒப்பீடாளவில் எளிதானது, ஆனால் தொப்பையை குறைப்பது மிகவும் கடினம். இருப்பினும், தினமும் வெறும் 5 நிமிட உடற்பயிற்சி மூலம் கூட வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
வெறும் 5 நிமிட உடற்பயிற்சியின் மூலம் தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைக்க முடியும் என நீங்கள் வியக்கலாம். ஆனால், உயர்-தீவிர உடற்பயிற்சி (HIIT) மற்றும் வலிமை பயிற்சிகளை தினமும் செய்வதன் மூலம் தொப்பையை கரைக்கலாம் (Weight Loss Tips) என்கின்றனர் நிபுணர்கள். சில உடல் பயிற்சிகள் தொப்பை தசைகளுக்கு அதிக வேலை கொடுத்து கரைப்பதுடன், வளர்சிதை மாற்றத்தையும் விரைவுபடுத்துகின்றன. உடலில் நீண்ட காலத்திற்கு கொழுப்பை எரிக்க உதவுகின்றன.
தொப்பை கொழுப்பை கரைக்கும் பிளாங்க் பயிற்சி
உடல் பருமனையும் தொப்பையை கரைக்கும் ஆற்றல் கொண்ட பிளாங்க் பயிற்சி என்னும் உடல் பயிற்சி மூலம், ஒரே மாதத்தில் தொப்பை கொழுப்பை மளமள என குறைக்கலாம். பிளாங்க் பயிற்ச , உங்கள் வயிற்றை சுற்றியுள்ள தசைகளுக்கு அதிக வேலை கொடுப்பதால், தொப்பை வெண்ணெய் போல் கரையும். இந்த பயிற்சியை செய்வதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்றம் துரிதமடைந்து, அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் பருமனும் குறையும்.
பிளாங்க் உடற்பயிற்சி தொப்பையை கரைப்பதோடு மட்டுமல்லாமல் முழு உடலையும் பலப்படுத்துகிறது. பிளாங்க் பயிற்சியை தவறாமல் தினம் செய்து வந்தால் கழுத்து, தோள்பட்டை, முதுகு, மார்ப்பு பகுதி, கைகள் என எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். இதனால் உங்கள் தோரணை மேம்படும்.
பிளாங்க் பயிற்சியுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேறு சில பயிற்சிகளும் தொப்பை கொழுப்பை கரைக்க உதவும்.
க்ரஞ்ச்ஸ்: இதுவும் தொப்பை கொழுப்பை குறைக்கும் சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். இதுவும் பிளாங்க் பயிற்சியை போலவே, வயிற்று தசைகளை டோன் செய்கிறது.
படி ஏறி இறங்கும் பயிற்சி: தினமும் படி ஏறறி இறங்குவதால், கொழுப்பை கொழுப்பை வேகமாக எரிக்கலாம். இதனால், எக்ஸ்கலேட்டர் லிஃப்ட் ஆகியவற்றை பயன்படுத்தாமல் படிகள் ஏறி இரங்குவது நல்ல பலன் தரும்..
ஸ்குவாட்ஸ்: இது தொப்பையை குறைப்பது மட்டுமின்றி உடலை டோன் செய்யவும் உதவுகிறது.
உணவுமுறையும் முக்கியம்
உடற்பயிற்சியால் மட்டும் தொப்பை குறையாது, இதற்கு ஆரோக்கியமான உணவும் அவசியம். சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக கலோரி உணவுகளை தவிர்க்கவும். ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் வளர்சிதை மாற்றம் வேகமாகவும், கொழுப்பு வேகமாகவும் குறையும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | அடிவயிறு தொப்பையை பட்டுனு குறைக்க... காலையில் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ