Tax Saving Tips: வரி சேமிப்புடன் அதிக வருமானம் கிடைக்க உதவும்... சில சிறந்த முதலீட்டு திட்டங்கள்

வருமான வரியை சேமிக்க பெரும்பாலானோர் வரி விலக்கை அளிக்கும் பல வகையான முதலீடுகளை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரிச் சலுகைகளை வழங்கும் பல முதலீட்டு திட்டங்களை அரசும் அறிவித்த வண்ணம் உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 31, 2025, 05:10 PM IST
  • SSY என்பது பெற்றோர்கள் தங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது.
  • மத்திய அரசாங்கத் திட்டமான SSY, EEE வரி விலக்கு வகையின் கீழ் வருகிறது.
  • வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 10 (11A) விலக்கு.
Tax Saving Tips: வரி சேமிப்புடன் அதிக வருமானம் கிடைக்க உதவும்... சில சிறந்த  முதலீட்டு திட்டங்கள் title=

வருமான வரியை சேமிக்க பெரும்பாலானோர் வரி விலக்கை அளிக்கும் பல வகையான முதலீடுகளை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரிச் சலுகைகளை வழங்கும் பல முதலீட்டு திட்டங்களை அரசும் அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், வரியைச் சேமிக்க உதவும் சில சிறந்த முதலீட்டு விருப்பங்களைப் பற்றி இன்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம்

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C பங்கு சந்தையுடன் - இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குகிறது. இந்த முதலீட்டின் வருமானம் சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால், இதில் ரிஸ்க் உள்ளது. ELSS (Equity-linked Savings Scheme) மூன்று வருட லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. எனவே, ரிஸ்க் எடுக்கும் திறன் அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த முதலீடு நல்ல தேர்வாக இருக்கும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

அரசாங்கத்தின் சுகன்யா சம்ரித்தி யோஜனா வேலை செய்யும் பெண்களுக்கு வரியைச் சேமிக்க நல்ல தேர்வாக இருக்கும். இது சுருக்கமாக SSY என்றும் அழைக்கப்படுகிறது. SSY என்பது  பெற்றோர்கள் தங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது. உங்கள் குழந்தையின் வயது 10 வயதுக்கு குறைவாக இருந்தால், நீங்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

EEE வரி விலக்கு

மத்திய அரசாங்கத் திட்டமான இது EEE வரி விலக்கு வகையின் கீழ் வருகிறது. இதன் பொருள் முதலீட்டாளருக்கு முதலீடு, அதில் கிடைக்கும் வருமானம் மற்றும் முதிர்வு தொகை ஆகிய அனைத்திற்கும் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 10 (11A) இந்த விலக்கு அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையானது பிரிவு 80C இன் கீழ் விலக்கு பெறத் தகுதியுடையது, இதன் வரம்பு ரூ. 1.5 லட்சமாகும்.

தேசிய சேமிப்புச் சான்றிதழ்

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C தேசிய சேமிப்புச் சான்றிதழில் செய்யப்படும் முதலீடுகளுக்கு விலக்கு கோர அனுமதிக்கிறது. விலக்கு கோரிக்கைக்கான அதிகபட்ச வரம்பு ரூ. 1.5 லட்சம். தபால் நிலையங்களில் கிடைக்கும் இந்தத் திட்டம் தற்போது குறைந்தபட்ச வைப்புத் தொகையான ரூ. 1,000 என்ற அளவில் தொடங்குகிறது. இதற்கு 7.7% நிலையான வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தின் வட்டி விகிதம் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

PPF திட்டத்தில், ஒவ்வொரு நிதியாண்டும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். வரிச் சேமிப்புடன் கவர்ச்சிகரமான வருமானத்தை விரும்பும் பெண்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி ஒரு நல்ல முதலீட்டு விருப்பமாகும். நிதி அமைச்சகம் 2025 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு வரை பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 7.10% ஆக நிர்ணயித்துள்ளது.

PPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தின் வட்டி மற்றும் திரும்பப் பெறுவதற்கு வரி ஏதும் இல்லை மற்றும் பிரிவு 80C இன் கீழ் இந்த முதலீட்டில் வரிச் சலுகையைப் பெறலாம். PPF கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இருப்பினும், இந்த காலகட்டத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.

மேலும் படிக்க | 2025 பட்ஜெட்டில் கொண்டு வரப்படும் 10 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? நிர்மலா சீதாராமன் மாஸ்டர் பிளான்

காப்பீடு

காப்பீட்டு திட்டங்கள் உங்களுக்கு கடினமான காலங்களில் உதவுவதோடு மட்டுமல்லாமல், ஒரு நல்ல வரிச் சேமிப்பு விருப்பமாகவும் இருக்கிறது. பெண் முதலீட்டாளர்கள் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளில் வரிச் சலுகைகளைப் பெறலாம். உங்கள் மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட உங்களுக்காக எடுக்கப்பட்ட பாலிசிகளுக்கு விலக்கு கோரலாம். இருப்பினும், மொத்த காப்பீட்டுத் தொகையில் 10% க்கும் அதிகமாகப் பிடித்தம் செய்ய முடியாது.

வருமான வரியின் 80U பிரிவின் கீழ், சில நோய்களால் பாதிக்கப்பட்ட நபருக்கான இந்த வரம்பு மொத்த காப்பீட்டுத் தொகையில் 15% ஆகும். உங்கள் குடும்பத்திற்கான உடல்நலக் காப்பீட்டு பிரீமியத்தில் விலக்கு கோரப்படலாம். இதில், உங்களுக்காகவும், உங்கள் மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும், பெற்றோருக்காகவும் செலுத்தப்பட்ட பிரீமியத்தில் நீங்கள் விலக்கு கோரலாம்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி

EPF (பணியாளர் வருங்கால வைப்பு நிதி) கணக்கில் ஒரு நிதியாண்டில்  செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வருமான வரியின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகையைப் பெறலாம்.

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS)

பிரிவு 80C இன் கீழ் கிடைக்கும் 1.5 லட்சம் ரூபாய் விலக்கு தவிர, NPS சந்தாதாரர்கள் துணைப் பிரிவு 80CCD (1B) -ன் கீழ் NPS திட்டத்தில் 50,000 ரூபாய் வரையிலான முதலீடுகளில் கூடுதல் வரி விலக்கு பலனைப் பெறுகிறார்கள். அதாவது இதன் மூலம் ரூ.2 லட்சம் முதலீட்டில் வரியைச் சேமிக்க முடியும்.

நிலையான வைப்பு திட்டங்கள்

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் 80C  பிரிவின் கீழ் ஐந்து வருடங்கள் குறைந்தபட்ச லாக்-இன் காலத்துடன் நிலையான வைப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கின்றன. வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம். ஆனால் முதலீட்டு வருமானம் வரிக்கு உட்பட்டது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) செய்யப்படும் முதலீடுகள் மீதும் (80C) பிரிவின் கீழ் வரி விலக்கு கோரலாம்.

மேலும் படிக்க | Budget 2025: நடுத்தர வர்க்க மக்களுக்கு நல்ல செய்தி நிச்சயம்... நிபுணர்கள் நம்பிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News