Samsung Galaxy S25 Ultra : சாம்சங் நிறுவனம்,ப்ரீமியம் வகை மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்25 தொடரை அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடரில் மூன்று போன்கள் உள்ளன - கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25+ மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் புதிய Galaxy S25 சீரிஸ் போனுக்கு ஒரு சிறந்த சலுகையைக் கொண்டு வந்துள்ளது. இதில் 256 GB மாடல் விலையில் 512 GB ஸ்டோரேஜ் கொண்ட ஃபோனை வாங்க நலல் சான்ஸ் உள்ளது
ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy S25 தொடரில், கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மாடலில், 256 ஜிபி சேமிப்பக விலையில் 512 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய ஃபோனைப் பெறலாம். இது முன் பதிவு செய்யும் போது, நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 256GB மாடலுக்கான விலையில், 512 GB மாடலை வழங்குகிறது.
சாம்சங் கேலக்ஸிக்கான சலுகை வாய்ப்பு இரண்டு நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். சாம்சங்கின் அதிகாரப்பூர்வ தளத்திலும் இந்த ஆஃபர் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியான தகவலில், வாடிக்கையாளர்களுக்கு Samsung Galaxy S25 Ultra போனில் சலுகையின் பலன் வழங்கப்படுகிறது என்றும் இந்த போனை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.21 ஆயிரம் ரூபாய் சலுகை அளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் Samsung Galaxy S25 Ultra விலை (Samsung Galaxy S25 Ultra Offer)
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 256 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.1,29,999 ஆகவும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.1,49,999 ஆகவும், 1 டிபி வகையின் விலை ரூ.1,65,999 ஆகவும் உள்ளது. இந்தச் சலுகை 1 TB வகையுடன் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
Samsung Galaxy S25 அல்ட்ரா சிறப்பு அம்சங்கள்
செயலி: Galaxy S25 Ultra ஆனது அதிவேக செயல்திறன் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் செயலியைக் கொண்டுள்ளது.
டிஸ்பிளே: இந்த ஃபோனில் 6.9 இன்ச் டைனமிக் AMOLED ஸ்கிரீன் உள்ளது, இது 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவுடன் 1 ஹெர்ட்ஸ் முதல் 120 ஹெர்ட்ஸ் வரை மாறுபடும் புதுப்பிப்பு வீத ஆதரவுடன் வருகிறது. இது தவிர, திரைப் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா ஆர்மர் 2 பயன்படுத்தப்பட்டுள்ளது.
கேமரா அமைப்பு: இந்த போனின் பின்புறத்தில் 200 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவை இருக்கும். அதே நேரத்தில், முன்புறத்தில் 12 மெகாபிக்சல் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி திறன்: 45 வாட் வயர்டு சார்ஜ் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஃபோனுக்கு உயிர் கொடுக்க வழங்கப்படுகிறது, இந்த ஃபோன் வயர்லெஸ் பவர்ஷேர் மற்றும் 15 வாட் வயர்லெஸ் சார்ஜ் 2.0 ஆகியவற்றை ஆதரிக்கிறது. எனினும், சார்ஜரை நீங்கள் தனியாக வாங்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ