2024 டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றது. பைனலில் வெற்றி பெற்ற பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் போன்றவர்கள் அணியில் தொடர்ந்து இடம் பெற்றனர்.
ஹர்திக் பாண்டியா
கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை சில தொடர்களில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியை வழி நடத்தி வந்தார். அவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாகவும் செயல்பட்டது. மேலும் ஹர்திக் பாண்டியாவிற்கு ஐபிஎல் தொடரில் கேப்டன்சி செய்த அனுபவமும் உள்ளது. ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியை கோப்பையை பெற வைத்தார். ஐபிஎல் 2023ல் அணியை பைனல் வரை கொண்டு சென்றார்.
கௌதம் கம்பீர் செய்த மாற்றம்
இருப்பினும் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பிறகு இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். இது அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஹர்திக் பாண்டியாவிற்கு தொடர்ந்து காயங்கள் ஏற்படுவதால் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமித்ததாக பிசிசிஐ தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. சூர்யகுமா யாதவ் கேப்டன்ஷியில் இந்திய அணி பங்களாதேஷ், இலங்கை, தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களை வென்றுள்ளது. ஆனால் இந்த தொடர்களில் ஒரு பேட்டராக சூரியகுமார் யாதவ் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு ஒரு முக்கியமான வீரராக உள்ளார். அவர் அவுட் ஆகாமல் இருந்தால் எப்படிப்பட்ட போட்டிகளையும் தனியாளாக வென்று கொடுப்பார். ஆனால் கடந்த 11 டி20 இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதை மட்டுமே இதுவரை அடித்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இது டி20 போட்டிகளில் சூர்யகுமாரின் பேட்டிங்கில் 8வது தொடர் தோல்வி ஆகும்.
4வது டி20யில் சூர்யகுமார் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மூன்றாவது டி20யில் 14 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யாகுமார் யாதவ் மொத்தமாக 28 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 0, 12, 14, 0 மற்றும் 2 என்ற எண்ணிக்கையில் சராசரியாக 5.6 மட்டுமே உள்ளது. இந்த தொடருக்கு முன்பு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் சூர்யகுமார் யாதவ் 21, 4 மற்றும் 1 மட்டுமே அடித்து இருந்தார். சூர்யகுமார் யாதவின் கடைசி 8 டி20 இன்னிங்ஸில் அவரது சராசரி 6.75 மட்டுமே உள்ளது. ஒருவேளை கேப்டன்சி பிரஷர் காரணமாக பேட்டிங்கில் சொதப்புகிறாரா என்பதை அறிய புதிய கேப்டனை மாற்றலாமா என்ற யோசனையில் பிசிசிஐ உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்ததாக இந்திய அணி ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையட உள்ளது.
மேலும் படிங்க: முதல் தர கிரிக்கெட்டில் விராட் கோலியை தட்டி தூக்கிய அந்த 9 பவுலர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ