Young Man Earned 40 Thousand Without Investment : பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றாலும், அதிலிருந்து லாபம் பெற வேண்டும் என்றாலும், நாம் சிறிதளவாவது முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் அந்த தொழிலையும் செவ்வனே செய்து அதிலிருந்து லாபம் பார்க்க முடியும். ஆனால், இங்கு ஒரு இளைஞர், எந்த பண முதலீடும் செய்யாமல், வெறும் குச்சியை மட்டும் விற்று ஆயிரக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்.
மஹா கும்பமேளா:
144 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் பெரிய பண்டிகை, மஹா கும்பமேளா. உத்தர பிரதேசத்தில் நடந்த இந்த விழாவில் இந்தியா மட்டுமன்றி உலகளவில் இருந்து பல கோடி பேர் கலந்து கொண்டனர். பலர் கங்கையில் புனித நீராடினர். எந்த திருவிழா நடந்தாலும், அது வணிகர்களுக்கும் சாதகமாக அமையும் நிகழ்வாக அமைந்துவிடும். அதிலும் ஆன்மிக நிகழ்வுகளில் பல்வேறு கடைகள் போடப்பட்டு, அதில் வியாபாரமும் ஜகஜோதியாக நடைபெறும். அப்படி, மகா கும்பமேளாவிலும், ஒரு பைசா கூட முதலீடு செய்யாமல் ஒரு இளைஞர் குச்சியை விற்று ஆயிரக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்.
வைரல் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் வீடியோவில் ஒரு நபர், நீள நிற ஜாக்கெட் அணிந்து பேசுகிறார். ஒரு கையில் வேப்பங்குச்சியை கையில் வைத்திருக்கிறார். தன் தொழில் குறித்து அந்த வீடியோவில் பேசும் நபர், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான் மஹா கும்பமேளாவிற்கு வந்ததாக பேசினார். அப்போது, “வேப்பங்குச்சியை விற்க வேண்டும் என்ற ஐடியா எப்படி வந்தது?” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், பெரிதாக சிரித்து விட்டு தனது காதலி இந்த ஐடியாவை தனக்கு கொடுத்ததாக கூறியிருக்கிறார். முதலீடின்றி தன்னிடம் இருந்த வேப்பங்குச்சியை விற்ற அந்த இளைஞர், மஹா கும்பமேளாவில் 1 வாரத்தில் ரூ.40,000 வரை அவர் சம்பாதித்திருக்கிறார். கும்ப மேளாவின் முடிவில் இவர் ரூ.70,000 வரை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
காதலிக்கு பாராட்டுகள்..
அந்த இளைஞர், இந்த யோசனை கொடுத்த காதலியை குறிப்பிட்டு பேசியிருந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்ல, இப்படி ஒரு காதலி இருந்தால் தானும் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என்று சில இளைஞர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர். இன்னும் சிலர், “குச்சியெல்லாம் வாங்கி வெச்சுட்டேன்..எனக்கு காதலி மட்டும் வந்தா எப்படி சம்பாதிக்கிறேன் பாருங்க..” என்று கூறி வருகிறார்கள்.
மேலும் படிக்க | மருமகளை திருமணம் செய்த மாமனார்! விரக்தியில் துறவியான மகன்..வைரல் செய்தி..
மேலும் படிக்க | வகுப்பறையில் மாணவனை திருமணம் செய்து கொண்ட ஆசிரியை! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ